பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மக்களின் மனதில் ஆழமாக வெற்றியாளர் என பதிந்த ஒருவர் தான் தர்ஷன். இவர் வெளியேறியது ரசிகர்களால் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இந்நிலையில் இன்று கிராண்ட் பினாலே மேடையில் கமல் தர்ஷனை அழைத்து பேசினார். அப்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறினார்.

அதன் பின்பு பேசிய தர்ஷன் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏனென்றால் இந்த தருணத்தில் எங்க அம்மாவோட கண்ணீர் பேசிவிட்டது என கூறினார்.

மக்களின் மனதில் இடம்பிடித்ததே மிகப்பெரிய வெற்றி.. கண்ணீர்விட்டு பேசிய தர்ஷனின் தாய்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

இதைத்தொடர்ந்து அவரது தாய் கூறுகையில், எலிமினேஷன் தருணத்தில் எனக்கு கவலையாக இருந்தது. ஆனால் வெளியே போகும் தருணத்தில் மக்கள் கையை கொடுத்து காட்டிய அன்பு காட்டியது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

வின்னர் ஆகவில்லை என்றாலும் மக்களின் மனதில் இவ்வளவு பெரிய இடம்பிடித்திருப்பதே, அதுவே மிகப்பெரிய வெற்றி என கண்ணீருடன் பேசியுள்ளார்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here