Tags World news
Tag: world news
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு…!
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹெரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தெரிவானார்.பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் காணப்படும்.இந்தநிலையில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் இடம்பெற்ற…
இந்திய மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது…!
இந்திய மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.வேளாண் சட்டங்களை மீள பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 55 நாளாகவும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இதற்கிடையில், ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டுள்ள நிலையில், இருதரப்புக்கும் இடையிலான சந்திப்பை இன்று நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், அந்த சந்திப்பும் தற்போது பிற்போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள்!
இந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்த நிலையில் டெல்லிக்கு 2 லட்சத்து 74 ஆயிரம் தடுப்பூசிகள் முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளது என அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.அவற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் சுகாதார தரப்பினருக்கு செலுத்தப்படவுள்ளது.மேலும் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
8 மாதங்களின் பின் சீனாவில் மற்றுமொரு கொவிட் மரணம்…!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவொன்று இன்று சீனாவின் வூஹான் பகுதியை சென்றடைந்துள்ளது.கொரோனா வைரஸ் உருவானமை தொடர்பில் குறித்த குழு ஆராயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் 10 பேர் அடங்கிய குறித்த நிபுணர் குழுவினர், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.கொரோனா வைரஸ் சீனாவில் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது.இதனையடுத்து பல நாடுகளிலும் கொவிட்-19 தாக்கம் அதிகரித்ததோடு 19 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர்.இதற்கிடையில் சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் சீனாவில் கொவிட் மரணம் ஒன்று…
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் சிறை தண்டனை இன்று உறுதி செய்யப்பட்டது…!
ஊழல் குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான பார்க் கியுன்-ஹைக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை தென் கொரியாவின் மேல் நீதிமன்றில் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.தென் கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதியான இவரின் ஆட்சி 2017 ஆம் ஆண்டு நிதி ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்தது.தென் கொரியாவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின் ஜனாதிபதி பதிவிலிருந்து நீக்கப்பட்ட முதல் பெண் தலைவர் இவர் ஆவார்.2018 ஆம் ஆண்டில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்இ வொன்…
ட்ரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டு மனுவை சமர்ப்பிக்க அமெரிக்க ஜனநாயகக் கட்சி தயார்…!
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு நுழைந்து ஜோ பைடனின் ஜனாதிபதி பதவியை உறுதிபடுத்தும் செயன்முறையை தடுப்பதற்கு ஆதரவாளர்களை திரட்டிய காரணத்திற்காக ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டு மனுவை தாக்கல் செய்வதற்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சி தயாராகி வருகிறது.இந்த குற்றச்சாட்டு மனு அமெரிக்க காங்கிரஸிற்கு வழங்கப்படவுள்ளதுடன், இது தொர்பான வாக்களிப்பு நாளை நடத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் இந்த மனுவை செனட் சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்காதிருக்க அமெரிக்க ஜனநாயகக் கட்சி முடிவு செய்துள்ளது. ஜோ பைடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்று நூறு நாட்களுக்கு பின்னரே…
அவுஸ்திரேலிய பிரதமரினால் சுற்றுலாப் பயணிகளுக்கான ஓர் அறிவிப்பு…!
தற்போது உலகாளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால் அவுஸ்திரேலிய நாட்டிற்கு வருகைத் தரும் விமானப் பயணிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லையென உறுதி செய்யப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.தென்னாபிரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வருகைத் தந்த பயணிகளில் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டமை காரணமாக அவர் இதனை அறிவித்துள்ளார்.
ஜோ பைடனின் பதவி பிரமாண நிகழ்விற்கு கலந்து கொள்ள மாட்டேன் – டொனால்ட் ட்ரம்ப்
மேலும் வன்முறையை தூண்டும் ஆபத்து காணப்படுவதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக ரத்து செய்வதற்கு டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த செய்தியை மேலும் உறுதிபடுத்தும் விதமாக டுவிட்டர் நிறுவனம் வலைப்பதிவு ஒன்றின் மூலம் அறிவித்திருந்தது.டொனால்ட் ட்ரம்பின் பிரதான தொடர்பாடல் சாதனமாக டுவிட்டர் காணப்படுவதுடன் அதன் மூலம் அவரால் 88 மில்லியனுக்கும் அதிகமான தன் ஆதரவாளர்களுடன் நேரடியாக தொடர்பாடவும் முடிகின்றது.அத்தடன் முகப்புத்தக நிறுவனமும் டொனால்ட் ட்ரம்பின் முகப்புத்தக கணக்கை அவரது ஆட்சிக் காலம் நிறைவடையும்…
டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் கணக்குகளுக்கு விடுக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கும் வரை இந்த தடை நீடிக்கும் என பேஸ்புக்கின் நிறுவுனர் மார்கஸ் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் தலைமையகம் என்று அழைக்கப்படுகின்ற வொசிங்டன் டிசியில் உள்ள கட்டிடத்தின் மீது, ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் வெற்றிபெற்றதாக, அமெரிக்க காங்கிரஸ்…
தமிழகத்தில் கொரோனா நிலவரம் தொடர்பான விபரங்கள்…!
தமிழகத்தில் நேற்றைய தினம் 971 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.இதன்படி, தமிழகத்தில் இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 2 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இதேநேரம், 820 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.இதற்கமைய, தமிழகத்தில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 22 ஆயிரத்து 370 ஆக உயர்வடைந்துள்ளது.நேற்றைய தினம் 11 மரணங்கள் பதிவான நிலையில், தமிழகத்தில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 177 ஆக…