Tags ராசி பலன்
Tag: ராசி பலன்
பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து நெருப்பில் போட்டாலே போதுமே!
பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது தாங்களாகவே முடிவு செய்து அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளும் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்புதான். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்து சென்றால் தான் இல்லம் இனிமையாக அமையும். நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று முட்டி கொண்டு சண்டை போட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் சென்றால், குடும்பம் சிதைந்து தான் போகும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…
இந்தப் பொருட்களையெல்லாம் அடுத்தவர்களுக்கு அன்பளிப்பாக, வாங்கி கொடுப்பவர்களுக்கு, பண கஷ்டம் என்பதே வாழ்க்கையில் வராது.
நம்முடைய பழக்க வழக்க முறைகளில் சுபகாரியங்களுக்கு, வீட்டு விசேஷங்களுக்கு அடுத்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம். பெரிய பெரிய ராஜாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அடுத்தவர்களை சந்திக்க செல்லும்போது, தங்களால் இயன்ற அளவு, தங்களுடைய சக்திக்குத் தகுந்தவாறு அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். எந்த அன்பளிப்பு பொருட்களை அடுத்தவர்களுக்கு, எப்படி கொடுக்க வேண்டும்? எந்த பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்தால், நமக்கு வரக்கூடிய பிரச்சனைகள், குறிப்பாக பண பிரச்சனைகள்…
சனியை வென்று கோடீஸ்வர யோகத்தை அடையப்போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் ? சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தெரியுமா? இன்றைய ராசி பலன் – 18-1-2021
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அவசரமான முடிவுகள் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்க செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சு சுதந்திரம் கிடைக்க கூடிய வகையில் அமையும். குடும்பத்தில் இருக்கும்…
இந்த பொங்கலில் இதை செய்ய மறந்திருந்தாலும் அடுத்த பொங்கலிலாவது இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்.
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக எந்த ஒரு வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினமும் ஒரு சுபமுகூர்த்த நாளாகவே கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினமான பொங்கல் தினத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை பார்த்து…
தை மாதத்தில் இந்த பரிகாரங்கள் செய்தால் அதிகப்படியான பலன்களை நிச்சயம் பெறலாம்.
சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் முதல் தினம் தான் தமிழர்களின் திருநாளான தை மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இந்த தை மாதம் சுபகாரியங்கள் அனைத்தையுமே செய்வதற்கு ஏற்ற ஒரு மாதமாக திகழ்கிறது. ஆன்மீக ரீதியான சில செயல்களை செய்வதற்கும் மிகச்சிறந்த மாதமாக தை மாதம் திகழ்கிறது. அந்த வகையில் சுப தினங்களான பொங்கல் மற்றும் அதனை தொடர்ந்து தினங்களில் நாம் செய்ய வேண்டிய சில தாந்திரீக பரிகாரங்கள் என்ன என்பது குறித்தும்,…
ருத்ராட்சம் அணிவதற்கான விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் ருத்ராட்சம் அணியலாம்?
இந்துமத பாரம்பரியங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உரித்தான ஒரு பொருளாக கருதப்படுவது ருத்ராட்சம். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற ருத்திராட்ச மரங்களில் காய்த்து, பழுக்கும் பழங்களிலிருந்து கிடைக்கின்ற விதைகள் தான் ருத்ராட்சம் எனப்படுகிறது. பொதுவாக இல்லற வாழ்விலிருந்து, துறவரம் வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் தங்கள் உடலில் மாலையாக அணிகின்ற ஒரு ஆன்மீக பொருளாக ருத்ராட்சம் விளங்குகிறது. இந்த ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்திராட்சம் முதல் 13 முக ருத்ராட்சங்கள் அதற்கு மேலான…
பெண்கள், மன குழப்பமான நேரங்களிலும், தெளிவான முடிவை எடுக்க இந்த பொருளை கையில் வைத்துக் கொண்டாலே போதும்.
ஆண்களினால் கூட சில சமயங்களில் குழப்பமான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்க முடியாது. வீட்டில் இருக்கும் ஆண்கள், குழப்பமான சமயங்களில் தங்களுடைய அம்மாவிடமோ, தங்களுடைய மனைவியிடமோ, இருக்கக்கூடிய பிரச்சனையை சொல்லி, என்ன செய்யலாம் என்ற தீர்வினை கேட்பார்கள். சில பேர் தங்களுடைய பெண் குழந்தையிடம், அதாவது தன்னுடைய மகளிடம் கூட கஷ்டத்தை சொல்லி, குழப்பமான பிரச்சினைக்கு தீர்வினை கேட்டுக் கொள்வார்கள். ஏனென்றால், சிக்கலான குழப்பங்களுக்கான தெளிவினை கொடுக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. எந்த வீட்டில் பெண்களை…
மார்கழி மாத தேய்பிறை பிரதோஷம்! சிவன் கோவிலில் இதை மட்டும் செய்தால் எல்லா கஷ்டமும் நீங்கி, சகல செல்வங்களும் கிடைக்கும் தெரியுமா?
நாளை மார்கழி மாதத்தில் வரக்கூடிய திரயோதசி திதியில், தேய்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடியது. பிரதோஷத்தில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, மூன்று உலகங்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. இந்த பிரதோஷ கால வேளையில் நாம் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வது என்பது பெரும் புண்ணியத்தை சேர்க்கும். சிவபெருமானுக்கு விரதமிருந்து, சிவ மந்திரங்களை இன்றைய நாள் உச்சரிப்பவர்களுக்கு செய்த பாவங்கள் எல்லாம் கரையக்கூடிய யோகம் உண்டாகும். பிரதோஷ காலத்தில் என்ன செய்யலாம்?…
பெண்கள் தங்களுடைய வீட்டில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இந்த இடம் அசுத்தமாக இருந்தாலும் வீட்டில் பிரச்சனைகள் வரும்.
என்னதான் வீட்டை பராமரிக்க ஆண்கள் உதவியாக இருந்தாலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முழு பொறுப்பும், அக்கறையும் பெண்களிடத்தில்தான் இருக்கும். அந்த வரிசையில் பெண்கள் தங்கள் வீட்டு பூஜை அறை, சமையல் அறை, குளியலறை, இப்படியாக எல்லா இடங்களையும் சுத்தமாகப் பராமரித்து வந்தாலும், குறிப்பாக பெண்கள் தங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் இந்த பொருட்களையும், இந்த பொருட்கள் வைக்கும் இடத்தையும் பிரத்தியேகமாக கொஞ்சம் அதிகமாக அக்கறை எடுத்து சுத்தமாக, பளபளப்பாக நிறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். அது என்ன…
இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் ராஜயோகத்தை வழங்கப்போகும் வருடத்தின் முதல் திங்கட் கிழமை இன்றைய ராசி பலன் – 4-1-2021
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…