Tuesday, June 18, 2024

டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்ந்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்

- Advertisement -
டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்ந்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்
டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்ந்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் சிறப்பாக ஆடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் குருபாஸ் 56 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான இப்ராஹிம் சத்ரான் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த அஸ்மத்துல்லா 22 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இருப்பினும் கடினமான பிட்ச் என்பதால் ஆப்கானிஸ்தான் எடுத்த 159 ரன்கள் நியூசிலாந்து அணிக்கு சவாலான ஸ்கோராகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடியபோது, நியூசிலாந்து அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. குறிப்பாக, குருபாஸ், இப்ராஹிம் சத்ரான் கொடுத்த பல வாய்ப்புகளை வீண்டித்தனர். மூன்று கேட்சுகள், ஒரு ஸ்டம்பிங், ஒரு ரன்அவுட் வாய்ப்புகளை எல்லாம் கோட்டைவிட்டனர்.

- Advertisement -

இதுதான் ஆப்கானிஸ்தான் வலுவான ஸ்கோரை நோக்கி செல்ல முக்கிய அடித்தளமாக அமைந்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியின் துல்லியமான பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் சீட்டுக்கட்டுகள் போல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டது.

- Advertisement -

ஆரம்பத்திலேயே ரன் கணக்கை தொடங்காமல் பின் ஆலன் விக்கெட்டை விட்ட நியூசிலாந்து அணியால் கடைசி வரை நிமிரவே முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டு, வெறும் 75 ரன்களுக்கு சுருண்டது.

இதனால் நியூசிலாந்து அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் டி20 உலக கோப்பையின் முதல் ஆட்டத்தில் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. நியூசிலாந்து அணியின் டாப் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்தளவுக்கு ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. 15.2 ஓவர்கள் மட்டுமே விளையாடியது நியூசிலாந்து அணி. ஆப்கானிஸ்தான் அணியில் கேப்டன் ரஷித் கான், ஃபரூக்கி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது நபி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

பணத்தை அள்ளிக் கொடுக்கும் அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரர்களாகும் ராசியினர்- இதில் உங்க ராசி இருக்கா?

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும்...

புதன் பெயர்ச்சி: 2 நாட்களில் அரசாளும் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் இவைதான்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள்...

100 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கபோகுது.

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் ஒரு...

இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்க போகுது…

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன்...

500 ஆண்டுகள் கழித்து உருவான பஞ்ச திவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசியின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் சுப...

Tamil Trending News

பிக் பாஸ் 8 :மிக விரைவில் துவங்கப் போகிறது.. போட்டியார்கள் விவரம் இதோ

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில்...

ரிஷபத்தில் உதயமாகும் குருபகவான் 2024: கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசி என்ன?

குருபகவான் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் 12...

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக சிங்கிள் சிங்கமாக சுற்றித்திறிந்தவர், பிரேம்ஜி. பிரபல...

2024 சனி வக்ர பெயர்ச்சி… ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் மாற்றம் – முன்னேற்றம்..!

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனீஸ்வரன், பெயர்ச்சி ஆகும் போது...

ஜூன் 3ம் திகதி ஆறு கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் – நிகழும் அதிசயம்

ஜுன் 3ம் தேதி ஒரே கோட்டில் புதன், செவ்வாய், வியாழன், சனி,...

ஜீன் மாத பலன்: பணமழை நனையப்போகும் ராசிகள்.

ஜுன் மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில்...

காதலிப்பவரா நீங்கள்!அடிக்கடி மெசேச் அனுப்பாதீர்கள் .உறவில் விரிசல் ஏற்படலாம்!!..

காதலிக்கும்போது, ​​​​காதலர்கள் பரஸ்பரம் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும், துணையை ஈர்க்கவும் தன்னால்...

Related Articles

error: Content is protected !!