Saturday, March 22, 2025

ஆனி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் சூரியன்! அட்டகாசமாக அனுபவிக்கும் ‘பலே’ ராசிகள்!

- Advertisement -
ஆனி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் சூரியன்! அட்டகாசமாக அனுபவிக்கும் ‘பலே’ ராசிகள்!
ஆனி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் சூரியன்! அட்டகாசமாக அனுபவிக்கும் ‘பலே’ ராசிகள்!

ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதம், தமிழ் ஆண்டின் மூன்றாவது மாதம் ஆகும். சூரியனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள், என்னென்ன பலன்களை அனுபவிக்க நேரிடும்? இது ஆனி மாத ஜோதிட கணிப்பு.

உத்தராயன புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. தேவர்களின் மாலைப் பொழுது என்று புராணங்கள் குறிப்பிடும் இந்த ஆனி மாதம் பல சிறப்புகளை கொண்டது. வட இந்தியாவில் ‘ஜேஷ்ட மாதம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘மூத்த’ அல்லது ‘பெரிய’ என்று பொருள் கொண்ட மாதம் ஆனி.

- Advertisement -

தமிழ் மாதங்களில் பெரிய மாதமாக இருக்கும் ஆனி மாதம், சில சமயங்களில் 32 நாட்கள் கொண்டதாக இருக்கும்.தசாவதாரத்தில் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதாரம் ஆனி மாதத்தில் நிகழ்ந்தது. மகாவிஷ்ணுவின் பிற அவதாரங்கள் யாவும் தீயவர்களை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரங்கள் என்றால் கூர்ம அவதாரம் மட்டும் தான், பாற்கடலில் இருந்த அமுதத்தை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட அவதாரமாகும்.

- Advertisement -

இப்படிப்பட்ட அருமை பெருமைகள் நிறைந்த ஆனி மாதத்தில், யாருக்கு எப்படி இருக்கும்? ராசிபலன் கணிப்புகளைத் தெரிந்துக் கொள்வோம்.

- Advertisement -

மேஷம்

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபார பணிகள் மத்தியமாக நடைபெறும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். மாமன் வழி உறவுகளின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமித்தமான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், அரசு காரியங்களில் கவனம் வேண்டும்.

ரிஷபம்

பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள். வேலையாட்களின் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். பண வரத்து இருந்தாலும் சிக்கனமாக செயல்படுவீர்கள், மனதில் அமைதி ஏற்படும் காலம் இது.

மிதுனம்

உறவுகள் மற்றும் குடும்பத்தினரின் மத்தியில் மதிப்பு உயரும். அரசுத் துறைகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து அனுகூலம் ஏற்படும். பிரச்சனைகளில் இருந்து வெளிவரும் அளவு சாதகமான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைத்து மன நிம்மதிஏற்படும்.

கடகம்

பிறரால் ஆதாயம் அடையும் வாய்ப்புகள் காணப்படுகிறது. சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்

சிம்மம்

தன்னம்பிக்கை மிக்க சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சக வியாபாரிகளால் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் காரியசித்தி உண்டாகும்

கன்னி

பயணங்களால் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் கன்னி ராசியினருக்கு சாதகமாக அமையும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப வரவுகள் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

துலாம்

மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

விருச்சிகம்

கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தாமதம் மறையும். உடல் தோற்ற பொலிவுகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் சற்று குறையும். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தனுசு

வாழ்க்கைத் துணைவர் வழியில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களால் மாறுபட்ட தருணம் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும்

மகரம்

மனப்பக்குவம் பிறக்கும் காலம் இது, வியாபாரத்தில் முயற்சிகள் கைகூடும். செயல்களில் ஒருவிதமான சங்கடங்கள் தோன்றும். இறை பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பது நல்லது. கலைஞர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உயரும். எதிர்பாராத பண வரவுகளுக்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.

கும்பம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கும்ப ராசிக்காரர்களுக்கு பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். எதிர்பாராத சிலருடைய அறிமுகத்தால் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

மீனம்

கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்கள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றாலும், சில அனுபவங்கள் புதிய கண்ணோட்டத்தைக் கொடுக்கும்

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link