இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

கடந்த வாரத்தில் ‘எங்கு பார்த்தாலும் சத்தம்’ என்ற தலைப்பில் காணொளியினை வெளியிட்டுள்ளனர். இதில் பொது இடங்களில் ஒருவர் நடந்து கொள்வது மட்டுமின்றி தன்னைப் போன்றே தனது பிள்ளைகளின் வாழ்க்கையினையும் கேள்விக்குறியாக்கிய தந்தையைப் பற்றியதாகும்.

பொதுவாக எந்தவொரு தகப்பனும் தனக்கொரு கெட்டப்பழக்கம் இருந்தால் அப்பழக்கம் தனது பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்று தான் நினைப்பார்கள். இங்கு புலம்பெயர்ந்து வெளிநாட்டிற்கு வந்த அங்கிள் தான் இருப்பதையும், தனது பிள்ளைகளையும் கண்டிக்காமல் செய்த காரியம் இம்மாதிரியான தந்தைகளின் நிலை என்ன என்பதை அருமையாக உணர்த்தியுள்ளனர்.