கோலிவுட்டின் நட்சத்திர தம்பதி சினேகா- பிரச்சனாவுக்கு விகான் என்ற மகன் இருக்கும் நிலையில், இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மிக எளிமையாக அனைவரிடம் பழகும் குணம் படைத்த சினேகா 8 வருடங்கள் காதலித்து பிரச்சனாவை கரம்பிடித்தார்.

சினேகாவின் இந்த குணம் பிடித்து போகவே காதல் வயப்பட்டதாக நெகிழ்கிறார் பிரசன்னா.

அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு அம்மாவும் தெய்வம், முதல் பிரசவத்தின் போது சினேகா பட்ட கஷ்டங்களை கூடவே இருந்து பார்த்திருக்கிறேன்.

கடைசி நேரத்தில் பிரசவ வலி வராமல் இருக்கவே, மருத்துவர் பெரிய Injection-யை எடுத்துக் கொண்டு வந்தார்.

அப்போது சினேகாவின் கைபிடித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த நான் தலைசுற்றி போய் ஓரமாக அமர்ந்து விட்டேன்.

அப்படியிருந்தும் வலி வராததால் அறுவை சிகிச்சை மூலமே விஹான் பிறந்தான், சாதாரண தலைவலியையே தாங்க முடியாத என் மனைவி பிரசவ வலியை பொறுத்துக்கொண்டது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என தெரிவித்துள்ளார்.