Wednesday, May 21, 2025

ஞானதிபதியின் நட்சத்திர மாற்றத்தால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! 4 ராசிகளுக்கு கேது எச்சரிக்கை!

- Advertisement -
ஞானதிபதியின் நட்சத்திர மாற்றத்தால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! 4 ராசிகளுக்கு கேது எச்சரிக்கை!
ஞானதிபதியின் நட்சத்திர மாற்றத்தால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! 4 ராசிகளுக்கு கேது எச்சரிக்கை!

ஜோதிடத்தில், கேதுவை பாவ கிரகம், நிழல் கிரகம் மற்றும் மாயை கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ராகு-கேதுவின் மோசமான நிலை வாழ்க்கையை அழிக்கிறது. ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு ராசிகளும் ஒன்றரை ஆண்டுகளில் தங்கள் ராசியை மாற்றும் கிரகங்கள். அது மட்டுமல்ல, இரண்டு கிரகங்களும் பின்னோக்கி சஞ்சரிக்கும் இயல்புடையவை.

கடந்த ஆண்டு அக்டோபரில் ராகு மற்றும் கேது கிரகங்கள் ராசி மாற்றம் செய்தன. அதன்பிறகு, ஒன்றரை ஆண்டுகள் கழித்து 2025 ஆம் ஆண்டில் தான் இந்த இரு கிரகங்களும் மீண்டும் ராசி மாற்றம் செய்வார்கள். தற்போது கன்னி ராசியில் இருக்கும் கேது இந்த ஆண்டு ராசியை மாற்றாவிட்டாலும், நட்சத்திரத்தை மாற்றுவார். ஜூன் 26-ம் தேதி நட்சத்திரம் மாறப் போகும் கேது, யாருக்கு என்ன செய்வார் என்று பார்க்கலாம்.

- Advertisement -

தற்போது சுவாதி நட்சத்திரத்தில் இருக்கும் கேது ஜூன் 26ம் தேதியன்று மாலை 6:13 மணிக்கு கேது பெயர்ச்சியாகி சித்திரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாவார். வழக்கமாக பிற நட்சத்திரங்கள் மாறுவதைப் போல அல்லாமல் எதிர் திசையில் கேது சஞ்சரிப்பதால், அவர் சுவாதியில் இருந்து சித்திரை நட்சத்திரத்துக்குள் நுழைகிறார். கேதுவின் இந்த நட்சத்திர சஞ்சாரம், 4 ராசிக்காரர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

- Advertisement -

கேது நட்சத்திர மாற்றத்தின் பாதகங்களால் பாடுபடப்போகும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

- Advertisement -

மிதுனம்:

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம் மிதுன மிதுன ராசிக்காரர்களுக்கு பாதகமாக இருக்கும். வேலைகள் அதிகமாக இருப்பது சுமையாக மாறிவிடும். பணிச்சுமையில் இருந்து விடுபட வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டாலும் அதில் வெற்றி கிடைக்காதது கவலையை அதிகரிக்கும். வேலை மற்றும் பொறுப்புகளில் இருந்து விடுபடுவதற்கான ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடையும். ஆனால், தற்போது நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறுக்கு கூட அதிக விலை கொடுக்க வைத்துவிடும். மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதால், புதிய வேலைகள் எதையும் தொடங்காமல் இருப்பது நல்லது.

கடகம்:

கேது பெயர்ச்சி நடைபெறும் ஜூன் 26க்குப் பிறகு வரும் நேரம் கடக ராசிக்காரர்களுக்கு மோசமானதாக இருக்கலாம். கேதுவின் சஞ்சாரத்தால் கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சவால்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு அதில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். வருமானம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பணப் பிரச்சனைகளால் மன நிம்மதி குறையும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் பண இழப்பை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் பிரச்சனை இருக்காது. நட்சத்திரம் மாறும் கேதுவால் செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

மீனம்:

கேதுவின் நட்சத்திர மாற்றம் மீன ராசியினருக்கு சாதகமாக இருக்காது. தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளில் சுணக்கம் ஏற்படும். பேச்சைக் கட்டுப்படுத்துவது நல்லது இல்லையெனில் மனதாங்கல்கள் அதிகரிக்கும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

கேது சிம்ம ராசிக்கு சென்றதால் 2025–2026ல் உங்கள் ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

📌 கேது பெயர்ச்சி 2025 – முக்கியமான மாற்றம்! மே 18, 2025...

இந்த 3 ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நேசிப்பவர்கள்! யார் தெரியுமா?

எந்த ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நடத்துவார்கள்? பல பெண்களின் கனவு...

சுக்கிரன் பெயர்ச்சி 2025: செல்வ ராஜயோகம் கிடைக்கவிருக்கும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

சுக்கிரன் ரிஷபத்தில் – செல்வ யோகத்தை தூண்டவிருக்கிறார்! 2025-ம் ஆண்டு ஜூன் மாதம்...

சனி பெயர்ச்சி 2025 முதல் 2027 வரை முழுமையான பலன்கள் – ராசி வாரியாக விளக்கம்

சனி பெயர்ச்சி 2025 - 2027 முழுமையாக: எப்போது, எவ்வாறு, யாருக்கு...

உலகின் தலைசிறந்த அம்மாக்கள் இந்த ராசியினர் தானாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

உங்கள் ராசி உங்களை ஒரு அற்புதமான தாயாக மாற்றுமா? ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,...

Tamil Trending News

ஜீ தமிழில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல் ‘வள்ளியின் வேலன்’ – ரசிகர்கள் வருத்தத்தில்!

📺 முடிவுக்கு வரும் ஜீ தமிழின் வெற்றிச் சீரியல் – ரசிகர்கள்...

இந்த 3 ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நேசிப்பவர்கள்! யார் தெரியுமா?

எந்த ராசி ஆண்கள் மனைவியை ராணி போல நடத்துவார்கள்? பல பெண்களின் கனவு...

எங்கள் பிரிவுக்கு அவரே காரணம்: ஆர்த்தி ரவியின் பரபரப்பான வெளிச்சம்

நடிகை ஆர்த்தி ரவியின் பரபரப்பான அறிக்கை! பல ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த...

திருமணம் செய்யவிருக்கும் விஷால்–தன்ஷிகா: இவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் தெரியுமா?

திருமணம் செய்யவிருக்கும் விஷால்–தன்ஷிகா: இவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் தெரியுமா? தமிழ் சினிமாவின்...

சனி பெயர்ச்சி 2025 முதல் 2027 வரை முழுமையான பலன்கள் – ராசி வாரியாக விளக்கம்

சனி பெயர்ச்சி 2025 - 2027 முழுமையாக: எப்போது, எவ்வாறு, யாருக்கு...

பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்… யார் அந்த நடிகை தெரியுமா?

பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்… யார் அந்த நடிகை தெரியுமா? நடிகர்...

“புதிய தொடக்கம்” – ரவி மோகனின் தோழி கெனிஷாவின் வைரல் பதிவு!

“புதிய தொடக்கம்..” ரவி மோகனின் தோழி கெனிஷா போட்ட பதிவு வைரல்! ஜெயம்...

சூர்யா 46 படத்தின் பூஜை நடத்தப்பட்டது – மமிதா பைஜூ கதாநாயகியாக இணைந்தார்!

சூர்யா 46: ஹைதராபாத்தில் இப்படத்தின் பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது! தமிழ் சினிமாவின் முன்னணி...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link