Sunday, January 24, 2021
Home ஆன்மீகம் சீரடியில் உள்ள முக்கியமான இடங்கள்

சீரடியில் உள்ள முக்கியமான இடங்கள்

குரு ஸ்தானம் :

பாபா முதன் முதலில் தோன்றி, சிலகாலம் வசித்து வந்த வேப்ப மரத்தடியே குரு ஸ்தானம். இதன் கீழுள்ள நிலவறையில் அவர் 12 ஆண்டுகள் வேப்பிலை மட்டுமே உண்டு தவம் புரிந்ததாக வரலாறு. பாபாவின் கட்டளைப்படி அவர் குருவின் சமாதி உள்ள இந்நிலவறையை மூடி விட்டனர். குருஸ்தானத்தில் பாபாவின் திருவுருவச் சிலை உள்ளது. எதிரில் அன்பர் ஒருவரால் பளிங்குக் கற்களாலான திருவடிகள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கு அகர்பத்தியின் மணம் கமழும்.

சமாதி மந்திர் :

- Advertisement -

குருஸ்தானத்தை அடுத்த கட்டிடத்தில் சமாதி மந்திர் உள்ளது. இது நாகபுரி கோடீஸ்வரர், பூட்டி என்னும் பெயருடைய பக்தர் தாம் வசிக்க பாபாவின் ஆணைப்படி கட்டிய மாளிகை ஆகும். இதன் நடுவே கோயிலோடு கூடிய அமைப்புள்ளது. பிற்பாடு இது பாபாவின் சமாதி ஆலய மாகி விட்டது. பாபாவின் அழகிய பெரிய உருவச் சிலை இங்குள்ளது. இதன் எதிரில் தான் சமாதி பீடம் உள்ளது.

- Advertisement -

இரண்டு ஹால்களும், மறுபகுதியில் பாபாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் வண்ண உருவங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஹாலின் கீழ்ப்பகுதிச் சுவர்களில் பெரிய கண்ணாடிகளில் காட்சிகள் உள்ளன. ஹாலின் இடப்புறமுள்ள அறை யில் பாபா உபயோகப்படுத்திய பொருட் களின் தொகுப்பு உள்ளது. பல்லக்கில் அவை வைக்கப்பட்டுள்ளன.

3 வித மிதி அடிகள், புகைக் குழாய்கள், சிறிதும் பெரிது மான டம்ளர், சமையல் பாத்திரங்கள், பஜனைக்கான ஜால்ரா போன்றவைகள், பாபாவின் கோல் முதலியன இதிலடங்கும். விடியற்காலை 5??, பகல் 12, மாலை 6, இரவு 10 மணி வேளைகளில் நான்கு கால ஆரத்திகள் (வழிபாடு) நடைபெறுகின்றன. சமாதி மந்திரில் பொரி, கல்கண்டு, உடைக்காத முழுத் தேங்காய், பழம் முதலியவை நிவேதனம் செய்யப்படுகின்றன.

இங்கு புனிதத்துணிகள் வாடகைக் குக் கிடைக்கும்.அவற்றை சமாதியின் மேல் சாத்தலாம். இதன் மண்டபத்தில் பஜனைகள் முதலியவை நடை பெறுகின்றன.

துவாரகாமாயி :

சமாதி மந்திரின் எதிர்புற மேடையின் அருகில் உள்ள வாயில் வழியாகவும் துவாரகாமாயியில் நுழையலாம்.இது 60 ஆண்டுகளாக பாபா வாழ்ந்து அருளிய புனித மசூதி. இதில் எப்போதும் எரியும் பெரும் துனி (புனித அக்னி குண்டம்) உள்ளது. இதற்கு அருகில் ஒரு மூலையில் பாபா காலத்தில் உணவுக்காக அங்கு கோதுமை மூட்டை வைக்கப்பட்டிருந்ததன் நினைவாகத் தற்பொழுதும் அதே பகுதியில் கோதுமை மூட்டை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று அதனை மாற்றி, புது மூட்டை வைக்கிறார்கள். துனி உள்ள உயரமான மண்டபத்தில் பாபாவின் உருவச் சிலையும் மசூதி மாடங்களும் உள்ளன. துனி மண்டபத்திற்கு எதிரில் உள்ள ஹாலில் ஒரு குட்டையான மரக்கம்பம் உள்ளது. (சுமார் 3 அடி)

இதற்கு எதிரில் பாபா பிறருக்கு உணவு சமைத்த இடம் குறியிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. பாபா சமைக்கும் பொழுது சிலநேரம் அம்மரக் கம்பத்தில் உட்கார்ந்து ஓய்வு எடுப்பதுண்டு என்றும், சிலநேரம் அதைச்சுற்றி வந்து வணங்குவது உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹாலில் பாபாவிற்கு குளிக்கப் பயன்படுத்திக் கொள்ள கொடுக்கப்பட்ட கல்லும், (பயன்படுத்தியதில்லை), மாவரைக்கும் எந்திரமும் உள்ளன. துனி மண்டபத்திற்கு எதிர்ப்புற ஓரத்தில் பாபாவின் முன்பு வணங்கி உயிர் துறந்த நோயுற்ற சசர்க்கஸ் புலியின் உருவச் சிலையும், சாவடி ஊர்வலத்தில் பாபாவின் முன்னால் நடந்த ஸ்யாம சுந்தர் குதிரை உருவச் சிலையும் உள்ளன. மேலும் அங்கு பாபாவின் திருவடிகளும் பதிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் பக்க அறைகளில் தேரும், பல்லக்கும் வைக்கப்பட்டுள்ளன.

சாவடி :

துவாரகாமாயிக்கு 30 அடிகளுக்குள் சாவடி உள்ளது.அதில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாபா பக்தர் ஊர்வலத்தோடு கிளம்பி வந்து இரவு தங்கி காலையில் மசூதிக்கு திரும்புவது வழக்கம். சாவடியில் இரு அறைகள் உள்ளன.

முதல் அறையில் பாபா அமர்ந்திருந்த நாற்காலி, கடைசியாக அவரது மகா சமாதிக்குப் பின்பு திருமேனியைக் கிடந்தி கழுவிய கட்டில் முதலியவை உள்ளன. அவ்வறையின் மேற்பகுதியில் பெரிய பல்லக்கு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த அறையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அது பாபா தங்கி உறங்கிய அறை.
அதிலும் பாபாவின் பெரும் உருவச்சிலை, பெரிய கண்ணாடி கள் உள்ளன. இங்கும் அமர்ந்து தியானம் செய்யலாம்.

லெண்டித் தோட்டம் :

இங்கு தான் பாபா முற்பகலில் தனியே செருப்பு அணிந்து உலாவி வந்தார். இதன் நடுவில் நந்தா விளக்கும், தந்தாத்ரேயர் உருவச் சிலையும் உள்ளன. தத்தருக்குப் பின்புறம் எதிர் திசை நோக்கியபடி ஸ்யாம சுந்தர் குதிரை உருவச் சிலை உள்ளது. லெண்டியில் உள்ள கிணறும் பாபாவின் திருக்கரங்களால் நீர் இழுத்துப் பயன்படுத்திய பாக்கியம் பெற்றது.

லெண்டியில் மான் தோட்டமும் உள்ளது. லெண்டிக்கு வெளியே பாபாவோடு தொடர்புடைய பக்தர் சிலரின் சமாதிகள் உள்ளன. அப்துல் பாபா, நானாவல்லி, வி.பி. அய்யர் (ராவ்பகதூர்) தத்யா பாடில் கோடே, பாவ் மகராஜ் கும்பார் சமாதிகள் அதில் அடங்கும்.

கண்டோபா கோயில் :

சீரடி பஸ் நிறுத்தத்திற்கு அருகில், சற்று எதிரில் உள்ளடங்கியுள்ளது கண்டோபா கோவிலாகும். இதுவும் பாபாவோடு தொடர்புடையதே.

மாருதி கோயில்:

சாவடியின் பின்புறத்தில் சுமார் 100 அடிக்குள் அனுமார் கோயில் உள்ளது. இதில் இரண்டு அனுமார் சிலைகள் உள்ளன. சிலைகளுக்குச் செம்மண் குழைத்துப் பூசியுள்ளனர். அவைகளின் மேல் இலைகள் சாத்தப்படுகின்றன.
இக்கோயிலும் பாபாவோடு சம் பந்தப்பட்டதே.

உதியின் சக்தியும் செயல் திறமையும் :

ஒருமுறை பாலாஜியின் திவசத்தின் போது சில விருந்தினர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது.ஆனால் சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்ட பேர்களை விட மூன்று மடங்கு பேர் வந்து விட்டனர்.

பாலாஜி மனைவி திகைத்து போய் விட்டாள். குழுமியுள்ள மக்களுக்கு சாப்பாடு பற்றாது என்றும், அது பற்றாது போகுமானால் குடும்பத்தின் கவுரவம் பாதிக்கக்கூடும் என்றும் அவள் நினைத்தாள். அவளுடைய மாமியார் பயப்படாதே.அது நம்முடைய உணவல்ல, சாயியினுடையது. ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதி போட்டு ஒரு துணி போட்டு மூடி அதை திறக்காமலே அவர்களுக்கு பரிமாறப்பட்டது. சாயி நம்மை இந்த அவமானத்திலிருந்து காப்பார் என்று

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software