விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் வீட்டிற்கு சனிபகவான் நகர்கிறார். அர்த்தாஷ்டம சனி முடிந்து புண்ணிய சனி ஆரம்பிக்கிறது. சனி பகவான் உங்கள் ராசிக்கு 5 மற்றும் 6ஆம் அதிபதி. அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இனி அலைச்சல்கள் இருக்காது. இதுநாள் வரை இருந்த மருத்துவ செலவுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகள் மீதான கவலைகள் அதிகரிக்கும். சனிபகவானின் பார்வை மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. பணவரவு அதிகரிக்கும், குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும், குதூகலம் கூடும். செய்யும் தொழிலில் லாபம் கூடும். கனவு நனவாகும் காலம் கனிந்து வருகிறது. தடைகள் நீங்கும் கன்னி ராசிக்காரர்களே… இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு அதிக நன்மைகள் நடக்கப்போகிறது. தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும், திருமணம் கைகூடி வரும், காதல் மணியடிக்கும். காதலர்களுக்கு கல்யாணம் கை கூடி வரும். வீட்டில் எப்போது உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வரும் அர்த்தாஷ்டம சனியால் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். இன்னும் சில மாதங்கள்தான் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். புத்திரர்களால் பிரச்சினை குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும். நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் போட்டியான உலகத்தில் ஜெயிக்க முடியும். வீடு நிலம் வாங்குவீர்கள் வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாராக மந்திரமாக எண்ணி செயல்களில் வெற்றி பெற முடியும். பெரிய மனிதர்கள் சகவாசம். அதிகாரிகளின் சலுகை இவையெல்லாம் கிட்டும். உங்கள் பணம் பொருள் கண் முன்னே களவு போனது போல் காணாமல் போகும் அல்லது பறிபோகவோ திருடு போகவோ வாய்ப்பிருக்கிறது எனவே பத்திரப்படுத்துங்கள். அலுவலகத்தில் எச்சரிக்கை வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையிலே உங்களை இயங்க வைப்பார். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். சக ஊழியர்களின் எதிர்பாராத உதவியும் அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு சாதகமாக இருந்து வரும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவு இருக்காது. எனவே கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்த பின் உங்களை ஸ்த்திரபடுத்திக் கொள்ளுங்கள் பங்குச்சந்தை முதலீடுகள் பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்தல் நலம். ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. உங்கள் பணம், உழைப்பினால் அடுத்தவர்கள்தான் ஆதாயம் அடைவார். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பணம் பொருள் மாட்டிக் கொள்ளும் என்பதால் கவனம் தேவை. மகிழ்ச்சியும் உற்சாகம் பெண்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைபேறு கிடைக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணக்சேர்க்கை கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. சுறுசுறுப்பாக இருந்தாலும் அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் ஏற்படும். பணம் பொருள் கிடைக்கும் சனிபகவான் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, 11ஆம் வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். சுபகாரியங்கள் வீட்டில் அதிகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களின் பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். அடிக்கடி விரதம் என்ற பெயரில் பட்டினி கிடக்க வேண்டாம் வயிறு வலி பிரச்சினைகள் ஏற்படும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்யும் காலமாக அமையும். திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானை தரிசனம் செய்து வர அதிக நன்மைகள் கிடைக்கும்.
Home ஜோதிடம் சனி பெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி 2020-23 - கன்னி ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கி நல்லவை நடக்கும் #sani peyarchi palankal...
சனிப்பெயர்ச்சி 2020-23 – கன்னி ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கி நல்லவை நடக்கும் #sani peyarchi palankal 2020-2023 #Kanni rasi
0
990
தொடர்புபட்ட செய்திகள்
இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் ராஜயோகத்தை வழங்கப்போகும் வருடத்தின் முதல் திங்கட் கிழமை...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…
இந்த ரேகை உங்களுக்கு இருக்கா? அப்போ நீங்க…?
கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…
இன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார்? இன்றைய ராசிபலன் 02-01-2021
இன்றைய ராசிபலன் 02-01-2021
மேஷம்
மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை...
இன்றைய ராசிபலன் 29-12-2020 இந்த இரண்டு ராசிக்காரர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க...
இன்றைய ராசிபலன் 29-12-2020
மேஷம்
மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால்...
இன்றைய நாளில் சகல செல்வங்களும் வந்து சேரும் ராசியினர் யார்?… 12...
இன்றைய ராசிபலன் 28-12-2020மேஷம்
மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும்....
இன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார் ? இன்றைய ராசிபலன் 27-12-2020
இன்றைய ராசிபலன் 27-12-2020மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில்...
ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...
Main Editor - 0
ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021, Rasi palan 2021 in tamil
ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 - Rasi palan 2021 உங்கள் வாழ்க்கையில் எதாவது புதிய மாற்றத்தை கொண்டு...
மீனம் ராசி பலன் 2021 Meenam rasi palan 2021 in...
மீன ராசி பலன் 2021 (Meena rasi palan 2021) படி இந்த மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். பணித்துறையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும் மற்றும் வெளிநாட்டிலிருந்து நல்ல லாபம்...
கும்ப ராசி பலன் 2021 Kumbam rasi palan 2021 in...
கும்ப ராசி பலன் 2021 (kumbha rasipalan 2021) படி இந்த ஆண்டு கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு பல மாற்றங்கள் கொண்டுவரக்கூடும். இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்கள் பணித்துறையில் முழு ஆதரவு கிடைக்கும்....
- Advertisment -