சனி பெயர்ச்சி 2023 – Sani peyarchi date 2023: தற்போது நீதிக்கடவுளான சனி பகவான் மகர ராசியில் உள்ளார். மகரம் சனியின் சொந்த ராசியாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, மகர ராசியின் அதிபதி சனி என்று கூறப்படுகிறது. தற்போது, சனி பகவான் வக்ர நிலையில், அதாவது, தலைகீழ் இயக்கத்தில் உள்ளார். எனினும், இந்த மாதத்திலேயே அவர் நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளார். சனி பகவானின் ராசி மாற்றங்களும், இயக்க மற்றும் நிலை மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்களை ஏற்படுத்தும்.
சனி பெயர்ச்சி எப்போது நிகழ்கிறது? Sani Peyarchi 2023 Date
பஞ்சாங்கத்தின்படி, 23 அக்டோபர் 2022 அன்று, சனி தனது வக்ர நிலையை மாற்றி நேர் இயக்கத்தை துவக்கவுள்ளார். சனியின் பாதை மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும். அதாவது, மேஷம் முதல் மீனம் வரை உள்ளவர்களுக்கு சனி பகவானின் மாற்றத்திற்கான பலன்கள் காணக்கிடைக்கும்.
எனினும், சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் தொந்தரவுகளை தரவுள்ளார். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், புதிய சர்ச்சைகளில் சிக்கும் நிலை வரக்கூடும். நீங்கள் சமூக ஊடகங்களில் அதிக ஆக்டிவாக இருக்கும் நபராக இருந்தால் கவனம் தேவை.
தவறான செய்திகளால் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளலாம். இந்த நேரத்தில் பணச் செலவுகள் கூடும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் மீது சனியின் சிறப்பு பார்வை இருக்கும். சனி உங்கள் பொறுப்புகளை அதிகரிக்கப் போகிறார். இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஏனெனில் சனி உங்கள் தொழிலில் பலன்களை தரப்போகிறார். இந்த நேரத்தில் ஈகோவில் இருந்து விலகி இருங்கள்.
சிலர் தவறான அறிவுரைகளையும் கூறலாம். இதனால் நஷ்டம் அடைய நேரிடும்.
துலாம்:
ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உங்கள் ராசியில் உள்ளது. ஆனால் துலாம் ராசியும் சனியின் விருப்பமான ராசியாகும். எனவே இந்த நேரத்தில் சில நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. வெளிநாடு செல்லும் உங்களின் விருப்பம் நிறைவேறும்.
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தை நீங்கள் முடிக்கக்கூடும். காதல் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றை தவிர்க்கவும், இல்லையெனில் பிரிய நேரிடலாம்.
மகரம்:
சனி உங்கள் ராசியில்தான் வக்ர நிலையில் உள்ளார். உங்கள் ராசியில்தான் அவர் பாதையை மாற்றவுள்ளார். உங்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கமும் உள்ளது. சனி பகவானின் நிலை மாற்றம் உங்களுக்கு பல நல்ல பலன்களை தரும். நீங்கள் கவலைப்பட்ட விஷயங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
சர்ச்சைகளை இந்த நேரத்தில் தீர்ப்பீர்கள். இந்த நேரத்தில் கடின உழைப்பு குறையாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சோம்பலில் இருந்து விலகி இருங்கள். மூத்தவர்களுடன் நல்ல உறவைப் பேணுங்கள்.
மேலும் படிக்க | ஏழரை சனி ஆட்டத்தால் 2023 நிம்மதி பெருமூச்சு விடப் போகும் ஒரே ஒரு ராசி! இனி தொட்டது துலங்கும்
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்