இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் டிம் ஸ்பெக்டர். இவர் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி கொண்டவர்களில் 3 பேரில் ஒருவருக்கு மூக்கு ஒழுகல் மற்றும் தொண்டை வறட்சி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.
அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். நெகடிவ் என்ற முடிவு வரும்வரை, அனைத்து நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும். உண்மையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என ஆய்வில் தெரிவித்துள்ளார்.
வாசனை அல்லது சுவையுணர்வு இழப்பு ஆகியவற்றுக்காக மக்கள் காத்திருக்க கூடாது. ஏனெனில் அவை வராது. காய்ச்சல் அல்லது தொடர்ச்சியான இருமல் ஆகியவற்றிற்காகவும் காத்திருக்க வேண்டாம்.
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மக்கள் சில நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். ஜலதோஷம் ஏற்பட்ட அறிகுறிகள் எதுவும் ஏற்பட்டால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் சிலருக்கு ஜலதோஷ பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். அது ஒமைக்ரான் அல்லது டெல்டாவாக இருக்கலாம்.
அதனால், அதுபோன்ற நபர்களை அலுவலகத்திற்கு வரவேண்டாம். கிறிஸ்மஸ் விருந்துகளுக்கு செல்ல வேண்டாம் என நாம் அறிவுறுத்த வேண்டும். பரிசோதனை செய்து, அறிகுறிகள் குறைந்தபின் அவர்கள் வெளியே வரலாம். அதற்கு முதல் சில நாட்கள் கடுமையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வகை, கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்திடாது. தடுப்பூசிகளால் நோயெதிர்ப்பு சக்தி கிடைத்து கடுமையான வியாதியை தடுத்து விடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று அறிக்கை தெரிவிக்கின்றது.
எனினும், தடுப்பூசிகளில் இருந்து கிடைக்கும் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து ஒமைக்ரான் தப்பி செல்வது எப்படி? என்பதற்கான பரிசோதனைகள் நடந்து கொண்டுள்ளன. சில வாரங்கள் கழித்தே அதன் முடிவுகள் தெரிய வரும்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்