Tuesday, April 16, 2024

Rennes நகரில் பலத்த வன்முறை வெடித்தது… பொதுச் சொத்து தீக்கிரை…!

- Advertisement -

நேற்று வியாழக்கிழமை இரவு Rennes நகரில் பலத்த வன்முறை வெடித்தது. பொதுச் சொத்துக்கள் பல தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

இரவு 10 மணி அளவில் square ligot பகுதியில் குவிந்த 200 வரையான வன்முறையாளர்கள், அங்குள்ள பொதுச் சொத்துக்களை சேதமாக்கினர். குப்பைத் தொட்டிகளை வீதியில் இழுத்து வந்து தீ வைத்து எரித்தனர். பல மகிழுந்துகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். வன்முறையாளர்கள் காவல்துறையினர் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர். காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி கலவரத்தை தடுத்து நிறுத்தினர்.

- Advertisement -

Contact Now!

ஆனால் அங்கிருந்து சென்ற கலவரக்காரர்கள் Sainte-Anne பகுதிக்குச் சென்று அங்கும் கலவரத்தில் ஈடுபட்டனர். மீண்டும் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

நள்ளிரவு 1 மணிக்கு Rennes நகரம் அமைதிக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Top 5 This Week

Related Posts

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link