Rasi Palan 2024 in Tamil தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசோபக்ருது வருஷம் – உத்தராயனம் – சிசிர ரிது – பங்குனி மாதம் – 31ம் தேதி – 13.04.2020 – அன்றைய தினம் சனிக்கிழமையும் – சுக்ல பக்ஷ சஷ்டியும் – ம்ருகசீர்ஷ நக்ஷத்ரமும் – சோபன நாமயோகமும் – பாலவ கரணமும் – சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 8.26க்கு (உதயாதி நாழிகை: 35:44)க்கு வ்ருச்சிக லக்னத்தில் ஸ்ரீகுரோதி வருஷம் பிறக்கிறது.
2024 Rasi Palan in Tamil – குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024
இந்த குரோதி வருடத்தில் 12 ராசிக்குமான விரிவான பலன்களை கீழே பார்ப்போம்
![]() | ![]() | ![]() |
---|---|---|
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
குரோதி வருடம்
கிரக பாதசார விபரங்கள்:
- லக்னம் – அனுஷம் 4ம் பாதம் – சனி சாரம்
- சூர்யன் – அசுபதி 1ம் பாதம் – கேது சாரம்
- சந்திரன் – ம்ருகசீரிஷம் 3ம் பாதம் – செவ்வாய் சாரம்
- செவ்வாய் – பூரட்டாதி 2ம் பாதம் – குரு சாரம்
- புதன்(வ) – உத்திரட்டாதி 3ம் பாதம் – சனி சாரம்
- குரு – பரணி 4ம் பாதம் – சுக்கிரன் சாரம்
- சுக்ரன் – உத்திரட்டாதி 4ம் பாதம் – சனி சாரம்
- சனி – சதயம் 2ம் பாதம் – ராகு சாரம்
- ராஹு – ரேவதி 2ம் பாதம் – புதன் சாரம்
- கேது – ஹஸ்தம் 4ம் பாதம் – சந்திரன் சாரம்
செவ்வாய் தசை இருப்பு: 01 வருஷம் – 04 மாதம் – 20 நாள்
குரோதி வருஷத்தின் நவநாயகர்கள்
- ராஜா – செவ்வாய்
- மந்திரி – சனி
- அர்க்காதிபதி – சனி
- மேகாதிபதி – சனி
- ஸஸ்யாதிபதி – செவ்வாய்
- சேனாதிபதி – சனி
- இரஸாதிபதி – குரு
தான்யாதிபதி – சந்திரன் - நீரஸாதிபதி – செவ்வாய்
- பசுநாயகர் – கோபாலன்
குரோதி வருஷ வெண்பா
கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் – கார்மிக்க
அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே
சொற்பவிளையுண்டெனவே சொல்
பாடல் விளக்கம் – குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை களவு பகை பெருகும். திருடர்கள் மக்களை தாக்கி அழிப்பர். ஊரில் பயம் மிகுதியாகும். மழையும் தேவையான நேரத்தில் மிகவும் குறைவாகவே பொழியும். எங்கும் காய்கறிகளின் பற்றாக்குறை காணப்படும். பயிர்களும் அழிந்து போய் மிகவும் அற்பமான விளைச்சலைத் தரும் என்று வெண்பாவில் சொல்லப்பட்டுள்ளது.