மக்களை சிரிக்க வைத்து வந்த நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ கடந்த சில நாட்களாக போராட்டகளமாக மாறியது. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி, கடந்த வாரம் முடிவடைந்தது. இறுதிப்போட்டியில் சமைத்து அனைவரையும் அசத்திய தொகுப்பாளர் பிரியங்கா, டைட்டில் வின்னர் ஆனார்.
டைட்டின் வின்னர் பிரியங்கா!
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரியங்கா, தளபதி நடிகரின் பெயர் கொண்ட தொலைக்காட்சியில பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். அந்த சேனலில் மிகவும் பிரபலமானதாகவும், பழையதாகவும் இருக்கும் “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியை மாகப ஆனந்துடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார்.
ஆரம்பத்தில் இருந்து புது நடுவரான மாதம்பட்டி ரங்கராஜையும், பழைய ஜட்ஜ்-ஆன செஃப் தாமுவையும் தனது சமையல் திறமையால் கவர்ந்து வந்த இவர், இறுதிப்போட்டியிலும் நன்றாக சமைத்து டைட்டிலையும் வென்று விட்டார்.
மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை:
இறுதிப்போட்டி நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே, குக் வித் காேமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை, அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் குக்-ஆக வந்த ஒரு பெண் தாெகுப்பாளர் தன் மட்டும் பார்க்காமல், தொகுப்பாளரின் வேலையைும் பார்ப்பதாகவும் தன் சுய மரியாதையை விட்டுக்கொடுத்து எங்கும் தன்னால் இருக்க முடியாது என்று கூறிவிட்ட இதிலிருந்து விலகியதாகவும் கூறினார். ஒரு சிலர் பிரியங்கா பக்கம் பேச, மக்கள் பலர் மணிமேகலையும் பக்கம் பேசினர். “இருவரில் யார் மீது தவறு?” என்ற விவாதம் இன்னும் நடந்து வருகிறது.
பிரியங்காவின் பதிவு..
மணிமேகலை-பிரியங்கா பிரச்சனையில், பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்து சில தொலைக்காட்சி நட்சத்திரங்கள் வீடியோக்களையும், பதிவுகளையும் வெளியிட்டார்களே தவிர பிரியங்காவின் பக்கமிருந்து எந்த வீடியாேவும் வெளியாகவில்லை. இப்போது, குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவுடன் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் மணிமேகலையை மறைமுகமாக தாக்கியிருப்பதாக பலர் பேசியிருக்கின்றனர்.
View this post on Instagram
குக் வித் கோமாளி ஜர்னியில் தன்னை, மோட்டிவேட் செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்திருக்கிறார். மேலும், “நாக்கு மேல் பல்லை போட்டு பலர் பேசும் இந்த காலத்தில், இந்த குக் வித் கோமாளி சீசன் முழுவதும் தனக்காக பேசிய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, “எனக்கு போட்டி நான் மட்டும்தான். என்னிடம் சிக்கன் கொடுத்தால் அதை வறுத்தெடுப்பேன், ஆட்டை கொடுத்தால் ஆட்டுக்கால் பாயா செய்வேன், ஆழ்கடலை காட்டுங்கள் அந்த மீன்களுடன் ஜாலியாக இருந்து விடுவேன்” என்று கூறியிருக்கிறார். இவரது பதிவு, ஒரு வேலை மணிமேகலையை தாக்கியதாக இருக்குமோ என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நெட்டிசன்கள் கருத்து:
ஒரு சிலர், இது ஏற்கனவே எழுதி வைத்து கொடுக்கப்பட்ட பரிசு என்றும், சுஜிதாவிற்குதான் டைட்டில் கிடைத்திருக்க வேண்டும் என்றும் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.