dhanusu rasi pooradam natchathiram 2020 in tamil,dhanusu rasi pooradam natchathiram tamil,dhanusu rasi pooradam natchathiram 2019 in tamil,dhanusu rasi pooradam natchathiram guru peyarchi palangal,pooradam nakshatra 2020 predictions in tamil,dhanusu rasi marriage life in tamil,pooradam natchathiram girl name,pooradam nakshatra boy names
பூராடம்
தமிழ் வருட பூராடம் நட்சத்திர பலன்கள் 14.04.2019 முதல் 13.04.2020 வரை pooradam natchathiram rasi palan in tamil
கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பதினேழாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
எச்சரிக்கையாக எந்த காரியத்தையும் செய்யும் பூராட நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சில தடைகள் ஏற்பட்டாலும் சாதகமான பலன் வரும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவைக் குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். பெண்கள் எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையைத் தரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினர் யாரிடமும் வீண் சண்டையைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும்.
அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம். கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.
பரிகாரம்:
கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
குரு, சுக்கிரன்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி.
அதிர்ஷ்ட மாதங்கள்:
வைகாசி, ஐப்பசி, தை, பங்குனி.