Ponniyin Selvan 1 public review Tamil உலகெங்கிலும்இன்று முதல் உங்கள் கண்களையும் கருத்தையும் மகிழ்விக்க மீள உயிர்த்தெழுந்து வருகின்றார்கள் சோழர்கள்!
1950 ஆம் ஆண்டு தமிழகத்தின் கல்கி வார இதழில் ரா.கிருஷ்ணமூர்த்தி எனும் எழுத்துச் சிற்பி மூன்றாண்டுகளாய் செதுக்கிய ஜனரஞ்சக நாவலே பொன்னியின் செல்வன்.
தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலமாக வர்ணிக்கப்படும் சோழர்களின் வரலாற்றுடன் தனது அபரிமித புனைவாற்றலையும் புகுத்தி கல்கி யாத்த பொன்னியின் செல்வன், பல தலைமுறைகளும் வாசிக்க விரும்பும் வரலாற்றுப் புதினமாகும்.
ஜன அலையை தன்பால் அதீதமாய் வசீகரித்த இந்த நாவலை திரைக்காவியமாக்கும் முயற்சியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், உலக நாயகன் கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பிரயத்தனம் செய்திருந்த போதும், அது வாய்த்தது என்னவோ மணிரத்னத்திற்குத்தான்
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்