பிரான்சில் குறிப்பிட்ட பகுதி ஒன்றில் திடீரென பலர் அகதி முகாம்களை உருவாக்கியதால், அங்கு பரபரப்பு நிலவியது.
பிரான்சின், Place de la République பகுதியில் நேற்று மாலை திடீரென பலர் இணைந்து முகாம்களை அமைத்தனர்.
பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து இச்செயலில் ஈடுபட்டனர். நேற்று மாலை 7 மணி அளவில் இங்கு வந்து சேர்ந்த நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள், சிறிய கூடாரங்களை அமைத்து அதற்குள் இருந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உடனடியாக பொலிசார் வரவழைக்கப்பட்டு, அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதில் தன்னார்வ தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கடந்த வார இறுதியில் செந்தனியில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை அரசு வெளியேற்றியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அகதிகளுக்கான போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் அவர்களை அரசு கைவிட்டுள்ளதாக குற்றம் சாட்டிய இந்த அமைப்பினர், விரைவில் அவர்களுக்கான பாதுகாப்பான தங்குமிடத்தை அமைத்துக்கொடுக்கும் படி கோரியதாக கூறப்படுகிறது.
இது குறித்து உள்துறை அமைச்சர் Gérald Darman தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் விரைவில் காவல்துறையினர் சமர்ப்பிக்கவேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படு என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்