பிரபல தனியார் ரிவி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கியவர் விஜே திவ்யா.
இவர் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் வில்லு படத்தில் தீம்தனக்க தில்லானா, தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் என் ஜன்னல் வந்த காற்றே பாடலையும் பாடியுள்ளார்.
இதையடுத்து, திவ்யா கடந்த வருடம் தனது நண்பரான ஷிபு தினகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது பாரிஸ் நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், திவ்யா பாரிஸ் நகருக்கு சென்ற போது ரயில் நிலையத்தில் தனக்கு கிடைத்த மோசமான அனுபவம் குறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், பாரிஸ் நகரில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, ரயில் குறித்து விவரம் கேட்பதுபோல் வந்த நபர் ஒருவர், எங்களது சூட்கேஸ் ஒன்றையும் லேப்டாப் பேக்கையும் திருடிச் சென்றுவிட்டார்.
அதில் இரண்டு லேப்டாப், ஐபோன், விலையுயர்ந்த நகைகள், ஆடைகள், பணம், சொத்து ஆவணங்கள், வங்கி ஆவணங்கள் என லட்சக் கணக்கில் மதிப்புடைய பொருட்கள் இருந்தது.
மேலும் எனது கணவரது பாஸ்போர்ட் மற்றும் ஆபிஸ் பைல்களும் அந்த பையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அவர்கள் இதனை பொருட்படுத்தவில்லை.
மேலும் தீண்டத்தகாதவர்கள் போல நடத்தினர். அதுமட்டுமின்றி ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்க்ககூறியபோது அவர்கள் கிண்டலாக சிரித்தனர் என பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில், பயணப்பட விரும்புபவர்கள் கவனமாக இருங்கள். ஏனென்றால் வெளியில் சில மனிதர்களுக்கு எந்த கொள்கைகளும், உணர்ச்சிகளும் இல்லை. மற்றவர்களின் இழப்பு குறித்தும், காயம் குறித்தும் எந்த கவலையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.