பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நடிகர் கொ ரோ னாவிலிருந்து குணமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கேரக்டரில் நடித்து வரும் நடிகர் வெங்கட் ரங்கநாதன் கொ ரோ னா தொற்றிலிருந்து தான் மீண்டு வந்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
20 நாட்களுக்கும் மேலாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்திருக்கும் அவர் அந்த நாட்கள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறியுள்ளார்.
2020-ம் ஆண்டில் தான் நிறைய கற்றுக்கொண்டதாகவும் அதற்காக நான் நன்றி சொல்லமாட்டேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
வெங்கட் ரங்கநாதனின் இந்த பதிவைப் பார்த்த பலரும் உடல்நலனில் அக்கறை செலுத்துமாறும், 2021-ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்றும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.