Monday, April 29, 2024

ஒரு மாதம் அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்தால் என்னாகும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

- Advertisement -

இன்று பெரும்பாலான நரப்கள் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். காரணம் நீரிழிவு நோயின் பயமே ஆகும். அந்த வகையில் நாம் அரிசி சாதத்தினை முற்றிலும் தவிர்த்தால் என்னவாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அரிசி

அரிசியை சாதமாக வடிப்பது எளிதான செயலாக இருந்தாலும், மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருக்கின்றது. அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி புரதம், கொழுப்பு, கால்சியம் இவைகளும் இருக்கின்றது.

- Advertisement -

அரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று கூறப்படும் நிலையில், பலரும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அரிசி சாதத்தை சாப்பிட தயங்குகின்றனர்.

ஒரு மாதம் அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்தால்

அரிசியில் அதிகமான அளவு கார்போஹைட்ரேட் இருக்கும் நிலையில், இவை உடலுக்கு ஆற்றலையும், உற்சாகத்தையும் கொடுப்பதுடன், நமது பணிகளை முழு ஆற்றலுடன் செய்யவும் முடிகின்றது.

ஆனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் குறைவாக உட்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

- Advertisement -

ஒரு மாதம் அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்தால்

நிரிழிவு நோயாளிகள் உஷார்?

இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது அனைத்து மக்களையும் பயமுறுத்தி வருகின்றது. 40வயதிற்கும் குறைவாக இருப்பவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவினை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது தற்போது அவசியமாகியுள்ளது. நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதம் உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.

ஏனெனில் இவை ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதால் பல பிரச்சினை ஏற்படுகின்றது. ஆதலால் நீரிழிவு நோயாளிகள் அரிசி உணவை மதிய நேரத்தில் சிறிதளவு மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மாதம் அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்தால்?
ஒரு மாதம் தொடர்ந்து அரிசி உணவை நாம் தவிர்த்தால் உடலில் கலோரிகள் கணிசமாக குறைந்து எடை குறைய வாய்ப்புள்ளது.

நாம் கார்போஹைட்ரேட் உண்ணாத காரணத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூட கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

ஆனால் இந்த எடை குறைப்பு முயற்சியில் அரிசி தவிர மற்ற தானியங்களையும் அல்லது அதே அளவிலான கலோரிகளை கொடுக்கும் மற்ற கார்போஹைட்ரேட் உணவுகளையும் நாம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

அரிசி உணவை நாம் தவிர்த்துவிட்டால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு நிச்சயம் சமநிலையில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மறுபடியும் அரிசி உணவை சாப்பிட்டால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொஞ்சமாக அரிசி உணவை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு செய்யாது. முற்றிலும் அரிசி உணவை சாப்பிடாமல் தவிர்த்தால் கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் பி, சில தாதுக்கள் கிடைக்காமல் போகலாம்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Top 5 This Week

Related Posts

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link