Friday, January 21, 2022

ஒமிக்ரோன் வைரஸ் : இரண்டாவது தொற்றாளரும் கண்டுபிடிப்பு!

- Advertisement -
- Advertisement -

ஒமிக்ரோன் வைரசின் முதலாவது தொற்றாளர் இன்று காலை இல் து பிரான்சுக்குள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாவது தொற்றாளரும் கண்டறியப்பட்டுள்ளார்.

Haut-Rhin நகரில் வசிக்கும் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 26 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் இருந்து பிரான்சுக்கு வந்த பெண் ஒருவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளார். 40-50 வயதுக்குட்பட்ட அவர், கடந்த ஜூலை மாதம் தனது இரண்டாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டிருந்தார்.

- Advertisement -

பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் கண்டறியப்படும் இரண்டாவது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர் இவராகும்.

முன்னதாக Seine-et-Marne மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த திரிபு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேவேளை, ரீயூனியன் தீவிலும் ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -
Latest news
- Advertisement -
Related news