இத்தாலிய அதிகாரிகளின் மெத்தனம்தான் பிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி பிரான்சுக்குள் நுழைய காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
வட ஆப்பிரிக்க நாடான துனிசியா நாட்டைச் சேர்ந்த Brahim Aouissaoui (21), முறையான ஆவணங்களின்றி இத்தாலிக்கு வந்தபோதே, அவன் கைது செய்யப்பட்டு ஐரோப்பாவிலிருந்தே நாடு கடத்தப்பட்டிருக்கவேண்டும், ஆனால், அதற்கு பதிலாக அவன் விடுவிக்கப்பட்டிருக்கிறான், இது அதிகாரிகள் செய்த மாபெறும் தவறு. அத்துடன், அவனுக்கு கொரோனாவும் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்படியிருக்கும் நிலையில், ஜிகாதி என சந்தேகிக்கப்படும் Aouissaoui பிரான்சுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருக்கிறான், 12 இஞ்ச் நீள கத்தியுடன் வெறியாட்டம் நடத்தி மூன்று பேரை கொலையும் செய்திருக்கிறான்.
இதுபோக, ஏற்கனவே அவன் 2016ஆம் ஆண்டு கத்தியுடன் வன்முறையில் ஈடுபட்டதாக நேற்று துனிசிய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
Aouissaouiயின் தாயான Gamra என்ற பெண்மணியும், அவன் முன்பு போதைப்பொருள் பயன்படுத்துவான் என்றும், பயங்கரமாக குடிப்பான் என்றும், சமீபத்தில் பயங்கர பக்தியுடையவனாக மாறிவிட்டான் என்றும் கூறியிருக்கிறார்.
வழக்கமாக அகதிகள் செய்வதைப்போல், வட ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு வந்த Aouissaoui, இத்தாலியத் தீவான Lampedusaவுக்கு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி வந்திருக்கிறான்.
அவன் வந்தபோது, அவனுக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் கப்பல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளான்.
அக்டோபர் 8ஆம் திகதி, அவன் இத்தாலியின் Bari துறைமுகத்தில் கப்பலில் வந்து இறக்கியபோது, அவனிடம் முறையான ஆவணங்கள் இல்லாததாலும், கொரோனா பிரச்சினைகள் காரணமாகவும், அவன் கைது செய்யப்பட்டிருக்கவேண்டும், நாடு கடத்தப்பட்டிருக்கவேண்டும் எல்லை அதிகாரிகள் அவனது கைரேகைகளையும் புகைப்படங்களையும் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், துனிசிய அதிகாரிகள் அவன் யார் என்பதை சரியாக தெரிவிக்காததால் அவன் விடுவிக்கப்பட்டிருக்கிறான், Nice நகருக்கு பயணப்பட்டிருக்கிறான்.
இதற்கிடையில், Aouissaouiயை பிரான்சுக்குள் அனுமதித்ததில் தங்கள் மீது தவறில்லை என்று கூறியுள்ள இத்தாலி உள்துறை அமைச்சர் Luciana Lamorgese, தங்களை துனிசிய அதிகாரிகளோ, இத்தாலிய உளவுத்துறையோ எச்சரிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
இப்படி பிரான்ஸ் இத்தாலி மீதும், இத்தாலி தன் உளவுத்துறை மீதும், துனிசிய அதிகாரிகள் மீதும் மாறி மாறி குறை சொல்லிக்கொண்டு பழியிலிருந்து தப்ப முயன்றுகொண்டிருக்கிறார்கள்.
ஆக, எல்லா பக்கங்களிலும் பாதுகாப்பு விடயத்தில் பயங்கர ஓட்டை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இவர்களது தவறுகளால் அநியாயமாக போன உயிர்கள் மட்டும் திரும்பிவரப்போவதில்லை!