France: கொரோனாக் கட்டுப்பாடுகளிற்காக நத்தாரிற்கு விடப்பட்டிருந்த எந்தச் சலுகைகளும், புதுவருடக் கொண்டாட்டங்களிற்கு வழங்கப்படவில்லை.
மாறாகப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
20h00 மணியிலிருந்து வெளியில் நடமாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் 135€ அபராதம் – இரண்டாவது மீறலிற்கு 200€ அபராதம்.
தனிப்பட்ட ஒன்று கூடல்கள் கொண்டாட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. – மீறினால் சட்ட நடவடிக்கையும் தண்டனையும் வழங்கப்படும்.
ஊரடங்கு அற்ற நேரத்திலும் 6 பேரிற்கு மேல் வீதிகளில், வெளிப்புறங்களில் கூடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
வீடுகளில் குழந்தைகளைத் தவிர்த்து ஆளுறு பெரியவர்களிற்கு மேல் கூடவேண்டாம் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல், முகப்பாதுகாப்பணி அணிதல், சாப்பாட்டு மேசையில் போதிய இடைவெளி விடுதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்குமாறும் சிபாரசிசு செய்யப்பட்டுள்ளது.
வீடுகளிற்குள் எத்தனை பேர் உள்ளார்கள் எனக் காவற்துறையினர் சோதனை செய்ய முடியாது. ஆனால் கொண்டாட்டங்களின் சத்தங்கள் மற்றவர்ளைப் பெரிதும் இடையூறு செய்து, கட்டுப்பாட்டை மீறிப் பலர் ஒன்றுகூடியிருப்பது அறியப்பட்டால்று அங்கு காவற்துறையினர் சோதனை செய்து அபராதம் விதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.