Thursday, January 23, 2025

E யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

- Advertisement -

தாராளமாக ஆலோசனைகளை அள்ளி வழங்கும் இவர்கள், அதிக சுதந்திரத்தை விரும்புவர். எதையும் உடனே கிரகித்துக்கொள்ளும் இவர்களின் எழுத்தில் சூரியக்கதிர்கள் படுவதால், எப்பொழுதும், சுறுசுறுப்பாக இருப்பர். தங்களைப் பற்றித் தாங்களே எதையாவது பெருமையாகவோ, தன்னடக்கம் உள்ளவர் போலவோ பேசிக்கொண்டிருப்பார்கள். மிகச் சீக்கிரமாக முன்னேறும் வழியைத் தேடுவதில் முனைப்பாக இருப்பர்.

எதிலும் மிகுந்த கவனத்துடன் செயல்படும் இவர்கள் கோபப்படாமல் தான் எண்ணியதை செயலுக்குக் கொண்டுவந்துவிடும் திறமைசாலிகள். இவர்களுக்கு என்று ஒரு கூட்டமுண்டு. ஏதேனும் ஒரு காரியம் செய்து இவர்கள் பெயரை நிலைக்க வைத்துக்கொள்வர். பிறர் கைவிட்ட பல காரியங்களை சிரமேற்கொண்டு எடுத்துச்செய்து வெற்றியும் அடைந்துவிடுவர். நலிந்துபோன பல நிறுவனங்களை இவர்களிடம் நம்பி ஒப்படைக்கலாம்.

- Advertisement -

அடுத்தவரிடம் வேலை செய்வதை விட சொந்தத் தொழில் செய்து பெரும் பொருளீட்டவே விரும்புவர். இவர்களின் ஜாலமான பேச்சு வாடிக்கையாளர்களைக் கவரும். புதுப்புது யுக்திகளைக் கொண்டு வெற்றி பெறுவதால் சிலர் வலிய வந்து இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பயனடைவர். சில வேலைகளில் வெற்றி பெற இயலாதபோது மனம் நொந்து போவர். ஆயினும், சுதாரித்துக்கொண்டு மீண்டும் முயற்சிப்பார்கள். இவர்களைப் பார்த்தால் யாருக்கும் ஒரு சுறுசுறுப்புத் தொற்றிக்கொள்ளும்.

- Advertisement -

இவ்வகையில் இவர்கள் மானிடத் தேனீயாவர். நாட்டுநலனில் அக்கறை இல்லாதவர்களை ஓரங்கட்டிவிடுவர். இவர்களின் மனம் விக்ரமாதித்தனின் வேதாளம் போன்றது. ஏதேனும் ஒரு துறையில் கவனம் செலுத்தினால் இவர்கள் வெற்றியடைவதைத் தடுக்க முடியாது.

- Advertisement -

இவர்கள் திறமையை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு லாட்டரி அடித்ததுபோல்தான். தூக்கத்தையும், சோம்பேறித்தனத்தையும் வெறுப்பர். பகல், இரவு பார்க்காமல் உழைக்கும் இவர்கள் உடம்பையும் பேணுவது நலம். காதலில் அதிக விருப்பமிருக்கும். எந்த ஊர், நாடு சென்றாலும் இவர்களுக்கு என்று ஒரு நட்பு வளையத்தைத் தக்கவைப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எதையும் சிந்தித்துச் செயல்படும் இவர்கள் ரகசியங்களை மட்டும் பிறரிடம் கொட்டி விடுவர். அடுத்தவரை உற்சாகப்படுத்தி வாழ்வில் முன்னேறச் செய்வர்.

வயிறு அடிக்கடி சேஷ்டை செய்யும். மனமும், உடலும் எப்பொழுதும் பரபரப்பாக இயங்குவதால் உடம்பு உஷ்ணத்தால் குழப்பமடையலாம். இயல்பாகவே ஞானம் பெற்ற இவர்களின் முதல் எழுத்து, வாழ்வின் உச்சத்திற்கு இழுத்துச் செல்லும் என்பது உறுதி.

Aயுடன் இணைந்து வந்தால் நல்லது . நீங்கள் பிறருக்கும் பிறர் உங்களுக்கும் பரஸ்பர உதவி செய்து கொள்வீரகள்.

கலைத்துறையில் ஜொலிக்கும் வல்லமையுடைய இவர்களுக்கு ஞானமும், தியானமும், யோகமும் கைவந்த கலை. அடுக்குமாடி கட்டிடம் போல், புதுப்புதுத் திட்டங்களைத் தன் மனதில் அடுக்கி வைத்துக்கொண்டேயிருக்கும் இவர்களை ஒரு சரித்திரப் பெட்டகம் என்றே அழைக்கலாம். இவர்களால் நண்பர்கள் கூட்டம் நிறைய பலன் அடையும். ஏதேனும் ஒரு வழியில் எளிதில் மற்றவரைத் தன்வசப்படுத்திவிடும் இவர்கள், எல்லாரிடமும் வளைந்து கொடுத்துப் போகும் பக்குவமுடையவராவார்கள்

ஏனைய எழுத்துக்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

சனிபகவான் உருவாக்கும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தால் வெற்றி அடையப்போகும் 5 ராசிகள்!

கும்ப ராசியில் சனிபகவான் பெயர்ச்சியால் உருவாகியுள்ள ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் மிகப்பெரிய...

Tamil Trending News

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

இந்த ராசிகளின் வரமும் சாபமும் என்ன? இப்போது தெரிஞ்சிக்கொள்ளுங்கள்!

இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் என்னன்னு...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link