நரேந்திர மோதி பாதுகாப்பு படையில் இடம்பிடிக்கும் கர்நாடகத்தின் முதோல் வேட்டை நாய் Mudhol Hound

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

Mudhol Hound dog for Narendra Modi security, The Mudhol Hound, also known variously as the Maratha Hound, the Pashmi Hound, the Kathiawar Dog, and the Caravan Hound, is a breed of sighthound from India. (Tamil News Daily)

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் பாதுகாப்புக்கு பிரத்யேகப் பொறுப்பு வகிக்கும் சிறப்புப் பாதுகாப்புக் குழு, தங்களுடைய மோப்ப நாய் பிரிவில் முதோல் வேட்டை நாய்களை இடம்பெற வைக்கவுள்ளது.

- Advertisement -

மிகவும் சுறுசுறுப்பானதாக கருதப்படும் இந்த வகை நாய்கள், எல்லா காலச்சூழலுக்கு தக்கபடி வாழும் தன்மையைக் கொண்டது. (Wikipedia)

- Advertisement -

கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள நாய்கள் ஆராய்ச்சி தகவல் மையத்தில் (CRIC) இந்த வகை நாய்கள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இவை இந்திய குடும்பங்களில் சாதாரணமாக உண்ணும் உணவை உண்கின்றன.

ஒரு நாளைக்கு இரண்டு முறை தலா அரை கிலோ மக்காச்சோளம், கோதுமை, துவரம் பருப்பு மட்டுமே இவற்றுடைய உணவு. இத்துடன் இவற்றுக்கு தினமும் இரண்டு முட்டையும் அரை லிட்டர் பாலும் வழங்கப்படுகிறது.

- Advertisement -

பல தனியார் செல்லப்பிராணி வளர்ப்போர் இந்த வகை நாய்களுக்கு வாரம் கொஞ்சம் கோழிக்கறியும் கொடுக்கிறார்கள்.

படையில் இவை இடம்பெற என்ன காரணம்?

முதோல் நாய்களுக்கு நீளமான தலை, கழுத்து மற்றும் மார்பு இருக்கும். கால்கள் நேராகவும், வயிறு மெலிந்தும் இருக்கும். காது கீழ்நோக்கி இருக்கும்.

கிரேட் டேனுக்குப் பிறகு உள்நாட்டு இனங்களில் இது மிக உயரமான நாயாக கருதப்படுகிறது. இதன் சராசரி உயரம் 72 செ.மீ ஆகவும் எடை 20 முதல் 22 கிலோ வரையிலும் இருக்கும்.

The Mudhol Hound, also known variously as the Maratha Hound, the Pashmi Hound, the Kathewar Dog and the Caravan Hound, is a breed of sighthound from India.
The Mudhol Hound, also known variously as the Maratha Hound, the Pashmi Hound, the Kathewar Dog and the Caravan Hound, is a breed of sighthound from India.

கண் இமைக்கும் நேரத்தில் முதோல் நாய்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை பாய்ந்து ஓடும் திறன் கொண்டவை.

இந்த நாய்களின் உடல் ஒரு விளையாட்டு வீரரைப் போன்றது. வேட்டையாடுவதில் இவற்றுக்கு ஈடு இணையில்லை.

முதோல் நாய்களின் சில பண்புகள் வியப்பூட்டுவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, இவற்றின் கண்கள் 240 டிகிரி முதல் 270 டிகிரி வரை சுழலும். இருப்பினும், சில உள்நாட்டு இன நாய்களை விட இவற்றுக்கு வாசனை உணர்வு குறைவாக உள்ளது. குளிர்ந்த காலநிலையுடன் ஒத்துப்போவதில் இவற்றுக்கு சிக்கல் இருக்கலாம்.

பிதார் கர்நாடக கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் பி.வி.சிவபிரகாஷ் இது பற்றி கூறும்போது, “முதோல் இன நாய்கள் ஆடம்பர பிராண்டட் உணவுகளை உண்ணக்கூடாது. கர்நாடகத்தின் சிஆர்ஐசியில் வளர்க்கப்படும் நாய்கள் எதைக் கொடுத்தாலும் சாப்பிட்டு விட்டு உயிர் வாழும். உரிமையாளர் விரும்பினால் கோழியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு ரொட்டி சாப்பிட்டும்கூட இவற்றால் உயிர் வாழ முடியும்,” என்கிறார்

முதோல் நாய் Mudhol hound

சிஆர்ஐசி தலைவரும் பல்கலைக்கழக உதவி பேராசிரியருமான சுஷாந்த் ஹான்ஜ் பிபிசி ஹிந்தியிடம் பேசும்போது, “இந்த நாயை நீங்கள் கட்டி வைக்க முடியாது. அவை எப்போதும் சுதந்திரமாக நடமாடவே விரும்பும். காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம், அது தனது வேலையை மிக விரைவாகச் செய்ய தூண்டப்படும்,” என்கிறார்.

The Mudhol Hound, also known variously as the Maratha Hound, the Pashmi Hound, the Kathewar Dog and the Caravan Hound, is a breed of sighthound from India.
The Mudhol Hound, also known variously as the Maratha Hound, the Pashmi Hound, the Kathewar Dog and the Caravan Hound, is a breed of sighthound from India.

“இது ஒரு மனிதனின் நட்புக்கு பாத்திரமாக விளங்கும் நாய். பலர் இதை நம்புவதில்லை. பொதுவாக இந்த நாய்கள் கண்காணிப்புப் பணிக்கு பயன்படுத்தப்படும். 2018ஆம் ஆண்டு, கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் பங்கேற்ற இந்த நாய்கள் இனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு பிரதமர் மோதியே இந்த இனத்தைப் பாராட்டினார்,” என்கிறார்.

இந்தியாவில் பல பாதுகாப்பு அமைப்புகள் சிஆர்ஐசியில் முதோல் நாய்க்குட்டிகளை வாங்கி பயிற்சி அளிக்கத் தொடங்கின. சஷஸ்திர சீமா பல் (எல்லை ஆயுதக் காவல் படை), ராஜஸ்தான் காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப், பெங்களூர் நகர காவல்துறை, பந்திபூர் வனத்துறை ஆகியவை தலா இரண்டு நாய்க்குட்டிகள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப்படை ஒன்று, எல்லை பாதுகாப்புப்படையான பிஎஸ்எஃப்-இன் தெகன்பூர் பிரிவு நான்கு, இந்திய விமானப்படையின் ஆக்ரா பிரிவு ஏழு, தொலைதூர கால்நடை படைப்பிரிவான ஆர்விசி மீரட் ஆறு என சிஆர்ஐசியில் இருந்து முதோல் நாய்களை வாங்கியுள்ளன.

முதோல் நாய்களின் பூர்வீகம்

முதோல் நாய்கள் முதன்முதலில் ராஜா மாலோஜிராவ் கோர்படே (1884-1937) ஆட்சியின் போது கவனம் பெற்றன. அப்போது வாழ்ந்த பழங்குடியின மக்கள், இந்த வகை நாய்களை தங்களுடைய வேட்டைக்குப் பயன்படுத்தினர்.

அப்போதுதான் மாலோஜிராவின் கவனம் முதல்கள் மீது திரும்பியது. பிரிட்டிஷ் பயணத்தின்போது ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு சில முதோல் நாய்க்குட்டிகளை அவர் பரிசாக அளித்தார்.

இது குறித்து சுஷாந்த் ஹான்கே கூறுகையில், “சத்ரபதி சிவாஜி மன்னரின் ராணுவம் முதோல் நாய்களை தங்களுடைய படை தேவைக்காக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது,” என்கிறார்.

டாக்டர் ஷிவ்பிரகாஷ் கூறுகையில், ”பொதுவாக இந்த நாய்கள் முதோல் தாலுகாவில் மட்டுமே காணப்படும். இப்போது இந்த நாய்கள் சிஆர்ஐசியில் இருந்து தனியார் செல்லப்பிராணி வளர்ப்பாளர்களால் வாங்கப்பட்டு பல இடங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்போது இவை மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

The Mudhol Hound, also known variously as the Maratha Hound, the Pashmi Hound, the Kathewar Dog and the Caravan Hound, is a breed of sighthound from India.
The Mudhol Hound, also known variously as the Maratha Hound, the Pashmi Hound, the Kathewar Dog and the Caravan Hound, is a breed of sighthound from India.

கடந்த ஆண்டு, கர்னாலில் உள்ள தேசிய விலங்கு மரபியல் வளங்கள் துறை (NBAGR), முதோல் இன நாயை உள்நாட்டு நாயாக அங்கீகரித்து சான்றிதழ் அளித்தது.

இந்த சான்றிதழைக் கொண்டு, பல தனியார் வளர்ப்பாளர்கள் இந்த நாய்களை பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு விற்கத் தொடங்கினர்.

முதோல் தாலுகாவில் உள்ள லோகாபூர் வெங்கப்பா நவல்கி பிபிசி ஹிந்தியிடம் பேசும்போது, “என்னிடம் 18 முதோல் நாய்கள் உள்ளன. அதில் 12 பெண் நாய், ஆறு ஆண் நாய். ஆண்டுக்கு ஒருமுறை அவை கலக்கின்றன. பெண் நாய்கள் ஒரு ஆண்டுக்கு இரண்டு முதல் நான்கு மற்றும் பத்து முதல் பதினான்கு குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. சிலர் நாய்க்குட்டிகளுக்கு ஊசி போடுவதில்லை அல்லது முறைப்படி அதை பதிவு செய்வதில்லை. அப்படி செய்வது அதிக நேரத்தை எடுக்கும். பொருள் செலவுக்கும் வழிவகுக்கும். இந்த வகை நாய்க்குட்டி ரூ.12,000க்கு விற்கப்படுகிறது. அதுவே நாய்க்குட்டிக்கு முறையாக ஊசி போட்டு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ரூ.13 முதல் 14 ஆயிரம் வரை அ

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை… அதிகாலையில் நடந்த அதிர்ச்சி

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு...

பிரான்சில் புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம்! அவதானம்!!

புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம் (PANNEAU) ஒன்று புதிதாக வீதிகளிலும்; நெடுஞ்சாலைகளிலும்...

அனைத்து ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி! வெளியான அறிவிப்பு

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும்...

நடிகர் மனோபாலா திடீர் மரணம்! கடும் அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார்.தமிழ்...

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார...

யாழ்ப்பாணம் விபத்தில் இளம் பெண்கள் இருவரை பலியெடுத்த கோரம்! உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை (01.05.2023) இடம்பெற்ற வாகன...

EuroMillions சீட்டிழுப்பில் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்ட ஒரு மில்லியன் Euro

EuroMillions விளையாட்டில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்றும் அத்தொகை உரிமை...

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் அரச...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link