தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா கல்லீரல் பிரச்சினை காரணமாக காலமானார். அவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் நடிகர் மனோபாலா. இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் ரஜினி நடித்த ஊர்க்காவலன்,
ஆகாய கங்கை உள்ளிட்ட 20 படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கம்போல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார்.