Friday, January 21, 2022

குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு! Omicron மாறுபாட்டிற்கு காரணம் என்ன?

- Advertisement -
- Advertisement -

ஆஸ்திரேலியா, பிரேசில், பிரிட்டன், கனடா, இஸ்ரேல், இத்தாலி, நைஜீரியா மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட பல நாடுகளின் கொரோனாவின் Omicron வேரியண்ட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

புதிய கோவிட்-19 வகை ஓமிக்ரான் தோன்றிய பின்னர், தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. எல்லைகளை மூடவும் சில நாடுகள் முடிவெடுத்துள்ளன. இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் (World Health Organisaiton), நோய்த்தடுப்பு மற்றும் சோதனை விகிதங்களே புதிய வேரியண்டுக்கு காரணம் என்று கூறுகிறது.

- Advertisement -

“உலகளவில், குறைந்த தடுப்பூசி கவரேஜ் மற்றும் மிகக் குறைந்த சோதனை என்ற நச்சு கலவைதான், கொரோனா வைரசின் திரிபுக்கான காரணம்” என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறினார், கொரோனா வைரஸின் டெல்டா திரிபை சுட்டிக்காட்டி அவர் இதை குறிப்பிட்டார்.

குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு! Omicron மாறுபாட்டிற்கு காரணம் என்ன?
குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு! Omicron மாறுபாட்டிற்கு காரணம் என்ன?

ஓமிக்ரான் மாறுபாடு நாட்டில் பதிவாகியிருப்பது குறித்து, ஒரு வாரத்திற்கு முன்பு தென்னாப்பிரிக்கா உலக சுகாதார அமைப்புக்கு (World Health Organisation) முறைப்படி தகவல் தெரிவித்தது. இந்த வகை கொரோனா வைரஸ், பல கண்டங்களுக்கும் வேகமாக பரவியது. மீண்டும், 2019 குளிர்காலத்தில், தோன்றிய கொரோனா அச்சத்தைப் போன்ற மிகப் பெரிய அச்சத்தை இந்த வெரியண்ட் உருவாக்கியுள்ளது. ​​​​உலகம் ஏற்கனவே “அதிக பரவக்கூடிய, ஆபத்தான” டெல்டா மாறுபாட்டுடன் போராடுகிறது, இது தற்போது உலகளவில் வைரஸ் தொடர்பான “ஆபத்து குறையவில்லை” என்பதை நினைவூட்டுவதாக கெப்ரேயஸ் தெரிவித்தார்.

- Advertisement -

“டெல்டா வேரியண்டில் பரவுவதைத் தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் ஏற்கனவே நம்மிடம் உள்ள கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும், ஓமிக்ரானில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று அவர் கூறினார்.

இதுவரை, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரிட்டன், கனடா, இஸ்ரேல், இத்தாலி, நைஜீரியா மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட இரண்டு டஜன் நாடுகளில் Omicron பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக டெட்ரோஸ் கூறினார்.

ஓமிக்ரான் அதிகமாகப் பரவுகிறதா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள பல வாரங்கள் ஆகலாம், மேலும் அது மிகவும் கடுமையான நோயை உண்டாக்குகிறதா என்பதை உன்னிப்பாக கவனித்தால் தான் தெரியும் என்றும், புதிய வேரியண்டுக்கு எதிரான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளின் செயல்திறனைப் பற்றி முடிவு செய்ய சற்று காலம் பிடிக்கும் என்று WHO கூறியது.

எது எவ்வாறாயினும், வைரஸை கண்டறிதல் மற்றும் பரவவலை தடுக்கும் கட்டத்தில்தான் உலகம் இருக்கிறது, COVID-19க்கு எதிரான கிட்டத்தட்ட இரண்டு வருட உலகளாவிய போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை ஒமிக்ரான் உறுதி செய்கிறது.

முன்னதாக, ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவலைத் தடுக்க கடந்த சில நாட்களில், உலகத்தின் சில நாடுகள் எடுத்த “துரித” மற்றும் “பாதுகாப்பு” நடவடிக்கைகளை UN சுகாதார அமைப்பின் தலைவர் விமர்சித்துள்ளார்.

செவ்வாயன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், WHO டைரக்டர் ஜெனரல், புதிய மாறுபாடு முதலில் அடையாளம் காணப்பட்ட போட்ஸ்வானா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை “சரியானதைச் செய்ததற்காக பிற நாடுகளால் தண்டிக்கப்படுகின்றன என்பது ஆழ்ந்த கவலையளிக்கிறது” என்று கூறினார்.

கடந்த வார இறுதியில் கொரோனாவின் புதிய பிறழ்வு ஒமிக்ரான் (Corona Varient Omicron) கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து டஜன் கணக்கான நாடுகள் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடைகளை விதித்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -
Latest news
- Advertisement -
Related news