காமெடி நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றால் லாஸ்லியா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈழத்து பெண் லாஸ்லியாவுக்கு இப்படி ஒரு ரசிகரா? அதிர்ச்சியில் உறைந்து போன நகைச்சுவை நடிகர்! மகிழ்ச்சியில் இலங்கை ரசிகர்கள் losliya
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளவர் இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.
நிகழ்ச்சிக்கு வந்த நாள் முதலே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் அவர். அவருக்கென ஒரு ஆர்மியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதிக சர்ச்சைகளில் சிக்காமல் வீட்டில் குறும்புகள் செய்து கொண்டு ஜாலியாக சுற்றி வரும் அவரது நடவடிக்கைகள் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. அவரது சோகக் கதை கேட்டு மக்கள் அதிகம் பரிதாபப்பட்டனர்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சதிஷ் லாஸ்லியா ஆர்மி பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘கடினமான போட்டி இளைஞர்களே’ என அந்த வீடியோ பற்றி சதீஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், அதில் அவர், கிராமத்து முதியவர் ஒருவரிடம், ‘உங்கள் கிரஷ் யாரு?’ எனக் கேட்கிறார். அதற்கு அந்த தாத்தா லாஸ்லியா எனக் கூறுகிறார். பாருங்க லாஸ்லியா ஆர்மில யார்லாம் இருக்காங்கனு என ஆச்சர்யத்துடன் இந்த வீடியோவை சதீஷ் வெளியிட்டுள்ளார்.