Sunday, July 12, 2020
Home செய்திகள் உலகம் லிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு - விமானங்கள், எரிபொருள் கிடங்குகள் சேதம் -...

லிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு – விமானங்கள், எரிபொருள் கிடங்குகள் சேதம் – Bombs on Libya airport – damage to aircraft, fuel depots

லிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடந்தது. இதில், விமானங்களும், எரிபொருள் கிடங்குகளும் சேதம் அடைந்தன. Bombs on Libya airport – damage to aircraft, fuel depots

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து லிபியாவில் குழப்பம் நிலவி வருகிறது. அப்போது நடந்த உள்நாட்டு கலவரத்தில், நீண்டகால சர்வாதிகாரியான கடாபி, ஆட்சியை விட்டு நீக்கப்பட்டார். பிறகு அவர் கொல்லப்பட்டார்.

பின்னர், கிழக்கு, மேற்கு என்று இரு பிரிவாக லிபியா உடைந்தது. தலைநகர் திரிபோலி உள்ளிட்ட மேற்கு பகுதிகள், ஐ.நா. ஆதரவு பெற்ற நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நிர்வாகத்தை துருக்கி, கத்தார் ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன.

Libya-airport-damage-to-aircraft-fuel-depots-thinatamil
Libya-airport-damage-to-aircraft-fuel-depots-thinatamil

- Advertisement -

கிழக்குப் பகுதி, ராணுவ உயர் அதிகாரி காலிபா ஹிப்டருக்கு விசுவாசமான படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களை ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன. தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில், கடந்த ஓராண்டாக கிழக்கு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உலக நாடுகள் வற்புறுத்தியும் சமாதானம் உருவாகவில்லை.

இந்நிலையில், தலைநகர் திரிபோலியில் இயங்கி வரும் ஒரே விமான நிலையமான மிடிகா சர்வதேச விமான நிலையம் மீது கிழக்குப் பகுதி படைகள் சரமாரி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின.

பீரங்கியால் தாக்குதல் நடத்தின. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானங்கள் சேதம் அடைந்தன. அதில் ஒரு விமானம், ஸ்பெயின் நாட்டில் சிக்கித்தவிக்கும் லிபிய மக்களை அழைத்து வருவதற்காக புறப்பட தயார்நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த தாக்குதலில் விமான எரிபொருள் கிடங்குகளும் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேசமயம், திரிபோலியின் மற்ற பகுதிகளிலும் கிழக்குப் படைகள் தாக்குதல் நடத்தின. ஆங்காங்கே ஏவுகணை தாக்குதல் சத்தம் கேட்டது. குடியிருப்பு பகுதிகளிலும் ஏவுகணைகள் விழுந்தன. இதில், 3 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு கிழக்குப் பகுதி படைகள் மீது ஐ.நா. ஆதரவு தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. குடியிருப்பு பகுதியில் 100 ஏவுகணைகளை வீசியதாக கூறியது. இந்த மாதம் மட்டும் அப்படைகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகி இருப்பதாக தெரிவித்தது. இந்த தாக்குதல் குறித்து கிழக்குப் பகுதி படைகள் எதுவும் தெரிவிக்கவில்லை. தங்கள் மீது தாக்குதல் நடத்தவே மிடிகா விமான நிலையத்தை துருக்கி பயன்படுத்தி வருவதாக கிழக்குப் பகுதி படைகள் ஏற்கனவே குற்றம் சாட்டி வந்தன. எனவே, இத்தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

- Advertisment -

ஏனைய செய்திகள்

கல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும். இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக்...

அரண்மனைக்கிளி சீரியல் ஜானுவா இவர்..? ஆள் அடையாளமே தெரியவில்லையே..! இப்போ எப்படி...

அரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி,...

தினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள்...

உணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா,...

வெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம்! இரவு படுக்கும் முன் இதை...

சீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான...

உடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..

கோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும். இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline