fbpx
Sunday, June 13, 2021
Homeசெய்திகள்Iron Dome system : ராக்கெட் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கும் கண்ணுக்கு தெரியாத அரண்!

Iron Dome system : ராக்கெட் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கும் கண்ணுக்கு தெரியாத அரண்!

இது குறுகிய தூர தரை முதல் வான் பாதுகாப்பு அமைப்பாகும். இதில் உள்ள சக்திவாய்ந்த ரேடார் மூலம் ஏவுகணைகள் ட்ராக் செய்யப்பட்டு Tamir இடைமறிப்பு கருவி மூலம் இஸ்ரேல் வான் பகுதிக்குள் நுழையும் ஏவுகணைகள் நடுவானிலேயே அழிக்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்திருப்பது இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல் தான். ஹமாஸ் போராளிகள் ஆயிரக்கணக்கான ராக்கெட்களை இஸ்ரேல் மீது ஏவிய நிலையில் இஸ்ரேலின் ராக்கெட் எதிர்ப்பு அமைப்பு வானிலேயே ராக்கெட்களை இடைமறித்து அழித்து 90% தாக்குதலை முறியடித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் Iron Dome system எனப்படும் கண்ணுக்கு தெரியாத அரண், இஸ்ரேலை பாதுகாத்திருக்கிறது. இது குறித்து சற்று விரிவாக அறிந்து கொள்வோம்:

இஸ்ரேல் – பாலஸ்தீனம் தாக்குதல் பின்னணி:

- Advertisement -

ஜெருசலேம் யாருக்கு சொந்தம் என்பதில் அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு உள்ளது. இதன்காரணமாக எல்லையில் அடிக்கடி இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும். அந்தவகையில், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளி குழுக்களுக்கும் இடையே கடந்த 4 நாட்களாக கடும் மோதல்கள் வெடித்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு ராக்கெட் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய குழுக்கள் மற்றும் பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் மற்றும் பீர்ஷீபா மீது ராக்கெட் வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

- Advertisement -

38 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்கள் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட நிலையில் இவற்றில் 90% நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. Iron Dome system என்ற பாதுகாப்பு அரணே இஸ்ரேலை பெரிய அசம்பாவிதத்தில் இருந்து காத்துள்ளது.

Iron Dome system என்றால் என்ன?

இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் இஸ்ரேலிம் Iron Dome system பாதுகாப்பு அரண் குறித்தும் பெரிய அளவில் பேசப்படுகிறது.

இது குறுகிய தூர தரை முதல் வான் பாதுகாப்பு அமைப்பாகும். இதில் உள்ள சக்திவாய்ந்த ரேடார் மூலம் ஏவுகணைகள் ட்ராக் செய்யப்பட்டு Tamir இடைமறிப்பு கருவி மூலம் இஸ்ரேல் வான் பகுதிக்குள் நுழையும் ஏவுகணைகள் நடுவானிலேயே அழிக்கப்படுகிறது.

எதிரி இலக்குகளிலிருந்து வரும் ராக்கெட்டுகள், ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் மோர்ட்டார் ஆகியவற்றில் இருந்து தாக்குதல்களை எதிர்க்க டெல்-அவிவ் இந்த அமைப்பைப் பயன்படுத்துகிறது. அனுமதியின்றி இஸ்ரேல் வான்வெளியில் நுழையும் தேவையற்ற ஹெலிகாப்டர்கள், விமானம் அல்லது பிறவற்றை இந்த அமைப்பால் தடுக்க முடியும்.

2006ம் ஆண்டு நடைபெற்ற இஸ்ரேல் – லெபனான் போரின் போது ஆயிரக்கணக்கான ராக்கெட்கள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டது, இப்போருக்கு பின்னர் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்க இருப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியாகி 6 வருடங்கள் கழித்து 2011ம் ஆண்டு Iron Dome system இஸ்ரேலால் நிறுவப்பட்டது.

இதனை இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ரஃபேல் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ளது. Iron Dome system குறித்து ரஃபேல் கூறுகையில், இந்த பல்நோக்கு பாதுகாப்பு அமைப்பு, மிக துல்லியமான தாக்குதல்களை, எந்த வகையான வான்வழி தாக்குதல்களையும் முறியடிக்கக்கூடியது என புகழ்ந்துள்ளது.

இதன் வான் வழி வெர்ஷன் மட்டுமல்லாது ஐ-வெர்ஷன் எனப்படுவது ராணுவ வீரர்கள்/தளவாடங்களுக்கு முன் சென்று பாதுகாப்பை வழங்குகிறது. இதன் மற்றொரு வெர்ஷனான C-Dome, கடற்படை பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2000க்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 90% பாதுகாப்பை Iron Dome system வழங்கியது என தெரிவித்துள்ள ரஃபேல், இது அனைத்து காலநிலைகளிலும், இரவு – பகல் என எந்நேரமும் பாதுகாப்பை வழங்கும் என தெரிவித்துள்ளது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software