இன்றைய ராசிபலன் Inraiya Rasi Palankal 2020 February 4 #astrology

மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியா பாரத்தில் புதிய சரக்குகள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள். மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் பணிவாக பேசுங்கள் . வாகனம் செலவுகள் வந்து போகும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும் . அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கடகம்

கடகம்: சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசிமுடிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.லாபம் பெருகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயமும் உண்டு. செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றிபெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். பாராட்டு பெறும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டு அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மாற்றங்கள் நிறைந்த நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். அவமானமும் பிரச்சனைகளும் வந்து போகும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்

விருச்சிகம்

விருச்சிகம்: தன் பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

2020 rasi palan 

தனுசு

தனுசு: பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். வியா பாரத்தில் இரட்டிப்பு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்

மகரம்

மகரம்: வருங்காலத்திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய அனுபவங்கள் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

2020 ராசி பலன் முழுமையான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் – Best 2020 Rasi Palan in Tamil

கும்பம்

கும்பம்: பால்ய நண்பர்களால் உதவி கிடைக்கும். தாயாருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத் தில் போட்டி அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

மீனம்: துணிச்சலாக சில முக்கியமுடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கரைகாட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம்உண்டு. பூர்வீகசொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பெறுப்பு களை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here