Sunday, January 24, 2021
Home Uncategorized இன்றைய ராசிப்பலன் (14-09-2019 ) :இன்று உங்களுக்கு பிரச்னையை சரி செய்ய கூடிய நாளாக இருக்குமாம்!...

இன்றைய ராசிப்பலன் (14-09-2019 ) :இன்று உங்களுக்கு பிரச்னையை சரி செய்ய கூடிய நாளாக இருக்குமாம்! #rasipalan #jothidam #goodmorningSaturday

மேஷம்

மேஷம்: எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்
கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். இனிமையான நாள்.

ரிஷபம்

- Advertisement -

ரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.
காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புது திட்டங்கள் நிறைவேறும் நாள்.

இன்றைய ராசிப்பலன் (14-09-2019 ) :இன்று உங்களுக்கு பிரச்னையை சரி செய்ய கூடிய நாளாக இருக்குமாம்! #rasipalan #jothidam #goodmorningSaturday

- Advertisement -

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் நாள்.

கடகம்

கடகம்: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். விருந்தினர்களின் வருகை உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். காரியம் சாதிக்கும் நாள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 (Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

துலாம்

துலாம்: புதிய ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வீட்டை விரிவுப்படுத்திகட்டுவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

தனுசு

தனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

மகரம்

மகரம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். பயணங்கள் சிறப்பாக அமையும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்

கும்பம்: மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software