இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், எவருக்குமே சரியான நேரத்தில் சாப்பிடவோ, சரியான நேரத்தில் தூங்கவோ நேரமே இல்லை. அதோடு நினைத்த நேரத்தில் நினைத்த உணவுகளை சாப்பிடுவதால், உடல் பருமன், தொப்பை கொழுப்பு என்பது பொதுவான பிரச்சனை. எல்லாருமே உடல் எடையை குறைக்க வேண்டும், தொப்பை கரைய வேண்டும் என்று எல்லா வகையிலும் ஒரு புறம் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில், தொப்பை கொழுப்பை வெண்ணெய் போல் கரைக்க உதவும் சில மசாலாக்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இஞ்சி
இஞ்சி, தொப்பை கொழுப்பை கரைக்க உதவும் அற்புதம் மசாலா. காலையில் வெறும் வயிற்றில், இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம், மெட்டபாலிசத்தை அதிகரிக்க பெரிதும் உதவும். இதனால் தொப்பை கொழுப்பு எரிக்கப்படும். அதோடு செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க இஞ்சி உதவும். குடல் ஆரோக்கியம் சிறப்பாக (Health Tips) இருந்தால் மட்டுமே, எடை இழப்பு சாத்தியம் என்பதை மறுக்க இயலாது.
மஞ்சள்
மஞ்சள் ஒரு அற்புதமான மசாலா. உடலுக்கு இயற்கையான வெப்பத்தை கொடுக்கும் மஞ்சள், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. அது மட்டுமல்ல, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் தன்மை உண்டு. மேலும், குர்க்குமின் நிறைந்த மஞ்சள் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஆயுர்வேதத்தில் மஞ்சளுக்கு சிறந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பால் அருந்துவதை வழக்கமாக கொள்வது பலன் அளிக்கும்.
இலவங்கப்பட்டை
லவங்கப்பட்டையில் பல வளர்ச்சி எதிர்ப்பு பண்புகளும் ஆக்சிஜனேற்ற கலவைகளும் உள்ளன. இதற்கு பசியை அடக்கும் தன்மை உண்டு. காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் அருந்துவதால், வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதன் மூலம் தொப்பை கொழுப்பை எளிதாக கரைக்கலாம்.
கருமிளகு
கரு மிளகு பல வகையில் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியது. இதில் உள்ள வைப்பரின் என்ற பொருள், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் தொப்பை கொழுப்பை எளிதாக கரைக்கலாம். மேலும் கரு மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், சளி இருமலைப் போக்கவும் உதவுகிறது. காலையில், பொடிக்கப்பட்ட கருமிளகு போட்டு கொதிக்க வைக்கப்பட்ட நீர் அருந்தலாம். இரவிலும் பாலில் கரு மிளகு மற்றும் மஞ்சள் கலந்து அருந்தலாம்.
ஏலக்காய்
உணவிற்கு நறுமணத்தை தரும் ஏலக்காய், வளர்ச்சிதை மாற்றத்தை இயற்கையாக அதிகரித்து எடையை குறைக்கும். இது உடலில் உள்ள கார்டிசோல் ஹார்மோன் அளவையும் கட்டுப்படுத்துகிறது. இரவில் தூங்கும் முன் ஏலக்காய் தட்டி போட்ட வெதுவெதுப்பான நீர், அல்லது இரண்டு ஏலக்காய்களை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது, செரிமானத்தை துரிதப்படுத்தி கொழுப்பை கரைக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு, உடலில் சேரும் அதிகப்படியான நீரை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.
மசாலா பொருட்களின் சில பக்க விளைவுகள்
மசாலா பொருட்கள் பொதுவாகவே குறைவான அளவை பயன்படுத்த வேண்டும். அதற்கு மிஞ்சிய எதுவும் நன்மை தராது. ம் போதுமான அளவில் எடுத்துக் கொள்ளும் போது, வியக்கத்தக்க பலன்களை தரும் மசாலாக்கள், அளவிற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் போது, எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தும். நெஞ்செரிச்சல், ஒவ்வாமை, செரிமான பிரச்சனை போன்றவை இவற்றில் சில. எனவே எடை இழக்க சேர்த்துக் கொள்ளும்போது, நீங்கள் எந்த அளவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்பது குறித்து உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று செயல்படுவது சிறப்பு.