இல் து பிரான்ஸ் உட்பட மேலும் சில மாகாணங்களில் இருந்து பயணிப்போர் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை இத்தாலியின் சுகாதார அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். இல் து பிரான்ஸ் (Ile-de-France) மாகாணம் உட்பட பிரான்சில் மேலும்
Auvergne-Rhône-Alpes,
Corsica,
Hauts-de-France,
Nouvelle -Aquitaine,
Occitanie,
Provence-Alpes-Côte d’Azur
ஆகிய ஆறு மாகாணங்களில் இருந்து இத்தாலிக்கு பயணமானால் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இன்று செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 22 ஆம் திகதியில் இருந்து இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும்.
இத்தாலியின் சுகாதார அமைச்சர் Roberto Speranza இது குறித்து தெரிவிக்கும் போது,
இந்த பரிசோதனை ‘கட்டாயமானதாகும்!’ எனவும், ஐரோப்பாவின் தொற்று நிலவரம் கவலையளிக்கின்றது. இத்தாலியில் தொற்று வீதம் குறைவடைந்திருந்தாலும், நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! எனவும் குறிப்பிட்டார்.