சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எப்போதும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன் இதை செய்தால், சாப்பிட்ட பின்னர் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக உயராமல் ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
உணவுப்பழக்கம் என்பது அனைவருக்கும் முக்கியமானது. அதுவும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உணவுப்பழக்கத்தில் கூடுதல் கவனமும், அக்கறையும் செலுத்த வேண்டும். நார்ச்சத்து, புரதம், வைட்டமிண்கள் என அனைத்து வகையான ஊட்டச்சத்துகளையும் அளிக்கும் உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுப்பழக்கம் மட்டுமின்றி உடற்பயிற்சியும் முக்கியம். எனவே, வாழ்க்கைமுறையை இதை சார்ந்து மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
நீரிழிவு (அ) சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்கள் தங்களின் உணவுமுறையில் கூடுதல் சிரத்தை எடுக்க வேண்டியது அவசியமாகும். உணவுமுறையை கவனிக்காவிட்டால் பின்விளைவுகள் சற்று கடினமாக இருக்கும்.
இருப்பினும், சர்க்கரை நோய் இருப்பவர்கள் என்ன சாப்பிடலாம், அதை எப்படி சாப்பிடலாம் என்பதில் சற்று குழப்பம் இருக்கலாம். சாப்பிட்ட பின்னர் ரத்த சர்க்கரை அளவு உயர்வது வாடிக்கையாக இருக்கலாம்.
அதாவது, சாப்பிட்ட பின்னர் கணையத்தில் இருந்து குறைவான சர்க்கரையே சுரக்கப்படுகிறது அல்லது உடலின் இன்சுலின் விளைவு சரியாக செய்யப்படுவதில்லை எனலாம். இதனால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. அந்த வகையில் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன் இந்த ஒரு விஷயத்தை செய்தால், சாப்பிட்ட பின்னர் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக உயராது.
அதாவது நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன் 20 கிராம் அளவுக்கு பாதம் பருப்பை (Almonds) எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு ஓரளவு கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர் பல்வேறு மருத்துவ நிபுணர்கள்.
இதனை செய்வதன் மூலம் குலூகோஸ் அளவு குறையும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் மக்கள் அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள் என்றும் இதனால்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்றும் கூறுகிறார், உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ். எனவே, அத்தகைய உணவுகளை உண்பதற்கு முன் பாதாமை சாப்பிடுவது அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
பாதாமில் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை நிறைந்துள்ளது. பெரும்பாலான உணவியல் நிபுணர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு உணவுக்கு முன் இதை எடுத்துக்கொள்வதை சரியான ஒன்றாக பரிந்துரைக்கின்றனர்.