
உடல் பருமன் என்பது இந்த நாட்களில் பலருக்கு உள்ள ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் சில மாற்றங்களை செய்தால் உடல் எடை அதிகரிக்காமல் தவிர்க்கலாம். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அதனை குறைக்க பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில குறிப்புகளை பின்பற்றினால் நாம் எளிதாக நம் உடல் எடையை குறைக்கலாம். இதற்கான சில எளிய வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அப்படி ஒரு எளிமையான, பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாத வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பச்சை பயறின் தண்ணீர்
பச்சை பயறின் தண்ணீர் நமக்கு ஆற்றலை அளிக்கும் ஒரு அற்புத நீராகும். ஆனால் இது எடை இழப்பிலும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பலருக்கு தெரியாது. பச்சைப்பயறு நச்சுகளை நீக்கும் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொள்வதன் மூலம் நமது உணவில் உள்ள நச்சுக்களை நாம் நீக்கலாம். இது தவிர இதில் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. இது கொழுப்பு ஜீரணமாகும் வேகத்தை குறைக்கிறது. ஆகையால் இது உடல் பருமன் அதிகரிக்க அனுமதிக்காது. இது மட்டுமின்றி பலவித உடல் பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாக்க பச்சை பயிறு உதவுகிறது. பச்சை பயறு மற்றும் அதன் தண்ணீரால் இன்னும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அவற்றைப் இங்கே பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க பச்சை பயறு தண்ணீர்
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் பச்சை பயறின் தண்ணீரை குடிக்கலாம். தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைக்கவும் உடல் எடையை வேகமாக குறைக்கவும் இந்த நீர் உதவுகிறது. இது தவிர பச்சை பயறு நீரை குடித்தால் வளர்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக நமது குடல் கொழுப்பை வேகமாக ஜீரணிக்க தொடங்குகிறது. இதனால் கொழுப்பு உடலிலேயே சேர்வது தவிர்க்கப்படுகின்றது. இந்த வகையில் பச்சை பயறு தண்ணீர் உடல் பருமன் அதிகரிக்காமல் காக்கிறது.
பச்சை பயறு தண்ணீரில் இன்னும் பல நன்மைகள் உள்ளன
அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது
இந்த பயறின் தண்ணீரை குடிப்பதால் நாம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது வயிற்றில் நிரம்பிய உணர்வு ஏற்படுகின்றது. இதனால் உடலின் ஆற்றல் அதிகரிப்பதுடன் நாம் புத்துணர்ச்சியுடனும் உணர்கிறோம். இதன் காரணமாக தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது தவிர்க்கப்படுகிறது. ஆகையால் பச்சை பயறு (Green Gram) நீரை அவ்வப்போது குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது.
மலச்சிக்கல் நீங்கும்
பச்சை பயறு தண்ணீர் மலச்சிக்கலை (Constipation) நீக்க உதவுகிறது. இது குடலில் தண்ணீரை சேர்த்து அதன் மூலம் அதன் செயல்பாட்டை விரைவுப்படுத்துகிறது. இதன் காரணமாக மலம் மென்மையாகி உடலை விட்டு எளிதாக வெளியேறத் தொடங்குகிறது. மேலும் இந்த தண்ணீரில் உள்ள பண்புகள் மலச்சிக்கல் ஏற்படாமல் உடலை பாதுகாக்கின்றன.