தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து 6,770 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டுள்ளது.
அட்சய திருதியை நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை… அட்சய திருதியையில் மக்களுக்கு அதிர்ச்சி!
தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிக ஏற்றத்தோடு காணப்படுகிறது. கடந்த மாதம் இதுவரை இல்லாத வகையில், தங்கம் விலை ஒரு சவரன் 55,000 ரூபாயை கடந்தது.
இந்த நிலையில், நேற்று 6,615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று காலை 45 ரூபாய் உயர்ந்து 6,660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த சில மணி நேரத்தில் கிராமுக்கு மேலும் 45 ரூபாய் உயர்ந்து 6,705 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து 6,770 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சவரன் தங்கம் 54,160 ரூபாயாக உள்ளது.
அட்சய திருதியையொட்டி காலை முதலே நகைக் கடைகளுக்கு பொதுமக்கள் செல்லும் நிலையில், தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வெள்ளி விலை, கிராமுக்கு ரூ. 2.50 உயர்ந்து 91.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலையும் 2,500 ரூபாய் உயர்ந்து 91,200 ரூபாயை எட்டியது.