Thursday, March 28, 2024

Top 5 This Week

Related Posts

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்

Gold Price Today in Tamil தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

அந்த வகையில், நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் (22 காரட்) 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.160 குறைந்து 37,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

இன்றைய தங்கம் விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,670 ஆகவும், சவரன், ரூ.37,360 ஆகவும் இருந்தது.

- Advertisement -

Contact Now!

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ.4,650ஆக குறைந்தது. சவரனுக்கு ரூ.160 வீழ்ச்சி அடைந்து ரூ.37,200ஆக சரிந்துள்ளது.

தங்கம் விலை இந்த வாரம் முழுவதும் கடும் ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. இந்த வாரத்தில் 3 நாட்கள் விலை குறைந்த நிலையில் 2 நாளாக தங்கம் விலை உயர்ந்தது, இன்று மீண்டும் சரிந்துள்ளது.

- Advertisement -

இந்த வாரம் தொடங்கும் போது தங்கம் கிராம் ரூ.4,632 ஆக இருந்தது, இன்று கிராம் ரூ.4650 ஆக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய கிராமுக்கு ரூ.18 உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.144 அளவில் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் நகர்வதால் தங்க நகை வாங்குவோர் மத்தியி்ல் பெரும்குழப்பம் நிலவுகிறது. இன்று விலை குறையுமா என்ற எதிர்ப்புடனும், நாளை விலை அதிகரித்துவிட்டால் என்ன செய்வது என்ற எதிர்ப்பார்ப்புடனும் குழப்பத்துடனே நகைகளை வாங்கி வருவதாக நகைப்பிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

பெடரல் வங்கி வட்டி வீதஅறிவிப்பு வந்தபின் தங்கம் விலையில் நிலைத்தன்மையான போக்கு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.61.50ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 சரிந்து, ரூ.61,500 ஆகவும் விற்கப்படுகிறது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link