சனி பகவான் நீதியின் கடவுளாவார். இவர் நாம் அதிகமாக பாவம் செய்தால் அதற்குரிய தண்டனையை இவர் வழங்கக்கூடியவர். நான் தான் என்ற திமிரும் ஆணவமும் கொண்டவர்களுக்கு சனி பகவானின் நன்மையான அருள் கிடைக்கும்.பலவிதமான தொழில்களுக்கு காரண கிரகம்மான சனிபகவானை தர்மவான், நீதி தவறாதவர் என்று அழைக்கின்றோம்.
அந்த வகையில் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர இரண்டரை ஆண்டுகாலத்தை எடுத்துக் கொள்வார். இந்த நிலையில் இவர் ஒவ்வொரு ராசியிலும் நிதானமாக பயணித்து பலன்களை கொடுக்க கூடிய கிரகம்மாக சனி பகவான் உள்ளார்.
சனி பகவான் நிலை
இந்த செப்படம்பர் முதல் சனி பகவான் காலபுருஷனுடைய 10ஆவது வீடான மகரத்தில் ஆட்சி செய்து வருகிறார்.காலபுருஷனுடைய 11ஆவது வீடான கும்பம், மூலத் திரிகோண வீடாகவும் விளங்குகின்றது.
துலாம் ராசியில் சனி பகவான் உச்சம் பெறும் சனி பகவான் மேஷம் ராசியில் நீசம் பெறுகிறார். சனி பகவானின் பயணம் இப்படியாக உள்ளது.
சனிபகவானின் நன்மை யாருக்கு
மக்கள் சேவகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கழிவு மற்றும் இரும்புப் பொருட்களில் தொழில் செய்யக்கூடியவர்கள்,தன் உயிரை துச்சம் என நினைத்து நாட்டை காப்பாற்றும் ராணுவ வீரர்கள், உயிர்களை காக்கும் மருத்துவர்கள்,அப்பழுக்கு அற்ற அரசியல் தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்கள் தன் உழைப்பின் மூலம் சமூகத்திற்கு பணி செய்கின்றனர்.
இவர்களுக்கு சனி பகவானின்பார்வைநன்மையாக அமையப்போகிறது.எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதுதான் சனி பகவானின் நிலை ஆகும்.இதனால் இந்த தொழில் செய்பவர்களை சனி பகவான் துணை நின்று அருள் செய்யப்போகின்றார்.
யாருக்கு கெடுதலை கொடுக்கப்போகிறார்
துலாம் ராசியின் சின்னமாக கண்கள் கட்டப்பட்ட தராசு உள்ளது. இதனால் நீங்கள் சமுதாயத்திற்கு உங்கள் செயல்பாடுகளால் ஆதாயம் உண்டாக்கினால் சனி பகவான் உங்களுக்கு லாபத்தை அள்ளி தரப்போகிறார்.
இதை தவிர பிறரின் உழைப்பை சுரண்டுபவர்கள், தன்நலம் மிக்கவர்கள், ஆதாயம் தேடுபவர்களுக்கு சனி பகவான் தவிர்க்க முடியாத துன்பத்தை தருவார். இதன்படி தீதும் நன்றும், பிறர்தர வாரா என்பதே சனி பகவானின் சூழ்ச்சுமம் ஆகும்.
சனி தரும் தொழில்கள்
பாலங்கள், கட்டமைப்பு, கார் தொழிற்சாலை, பெட்ரோல் கெமிக்கல் வணிகம், இரும்புத் தொழிற்சாலைகள், பூமிக்கு அடியில் கிடைக்கும் கனிமவளங்கள் இந்த தொழில் செய்பவர்களுக்கு சனி துணை நிற்பார். இவர்களுக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும்.
இந்த இடங்களில் செவ்வாயின் ஆட்சியும் உள்ளது. தொழில் மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு வழியில் பயன்பட்டால் நீங்கள் அசைக்க முடியாத உயரத்தை அடைவதற்கு சனி துணை நிற்பார்.
நீங்கள் செய்யும் நன்மையான பலன்கள் உங்களின் வாரிசுகளுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை தரும். வாரிசுகள் சுகமான வாழ்கையை வாழ்வார்கள்.