பிரான்சின் ஒரு பகுதியாக விளங்கும் புதுகேலடோனியா என்ற நாடு, பிரான்சிடமிருந்து விடுதலை பெறுவதா அல்லது பிரான்சுடனேயே இணைந்திருப்பதா என்பதை முடிவு செய்வதற்காக நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
திரள் திரளாக மக்கள் கூடி வாக்களித்த அந்த பிரமாண்ட வாக்கெடுப்பில், நாட்டு மக்களில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
1980களில் கேலடோனியா நாட்டில் வாழும் பூர்வக்குடியினரான கனக் இன மக்களுக்கும் ஐரோப்பாவிலிருந்து சென்று குடியேறியவர்களின் சந்ததியினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.
1988இல் சமாதான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டாலும், தொடர்ந்து பிரான்சிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என ஒரு கூட்டம் மக்கள் விருப்பம் தெரிவித்து வருவதையடுத்து, கேலடோனியா நாட்டில் அது தொடர்பில் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
2018ஆம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பு ஒன்றில், 56.4 சதவிகிதம் மக்கள் கேலடோனியா பிரான்சிடமிருந்து பிரியக்கூடாது என வாக்களித்தனர்.
தற்போது, நேற்று நடந்த வாக்கெடுப்பிலும் 53.3 சதவிகிதம் மக்கள் பிரான்சுடன் இணைந்திருக்க விரும்புவதாக வாக்களித்துள்ளனர்.
வாக்க்கெடுப்பு முடிவுகளைத் தொடர்ந்து, குடியரசு மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தியுள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இதே காரணத்தை முன்னிட்டு, 2022ஆம் ஆண்டு மூன்றாவது கட்ட வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்