பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பிராந்தியத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் தற்போது வரை 6,75,736 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 32,383 பேர் பலியாகியுள்ளனர்.
ஆகஸ்ட் பிற்பகுதியில் அதிவேகமாக பரவத் தொடங்கிய தொற்றுநோய்களின் வீதத்தைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் போராடி வருகிறது.
இந்நிலையில் Île-de-பிரான்ஸ் பிராந்தியத்தில் 40% க்கும் மேற்பட்ட தீவிர சிகிச்சை மருத்துவமனை படுக்கைகள் இப்போது கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன என்று பிரான்ஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தலைநகர் பாரிஸையும் உள்ளடக்கிய Île-de-பிரான்ஸ் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளில் 449 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Île-de-பிரான்ஸ் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட பிரான்சின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.
சுமார் இரண்டு வாரங்களில் 50% தீவிர சிகிச்சை மருத்துவமனை படுக்கைகள் நிரம்பக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
சில மருத்துவமனைகள் ஏற்கனவே திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளை மறுசீரமைக்கத் தொடங்கியுள்ளன.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்