பெற்றோலிய நிறுவனமான TotalEnergies நிறுவனத்தின் ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
Normandy நகரில் உள்ள Gonfreville சுத்திகரிப்பு ஆலையின் ஊழியர்களே வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக இன்று நவம்பர் 2 ஆம் திகதி அறிவித்துள்ளனர். தொழிற்சங்கத்துக்கு பெற்றோலிய நிறுவனத்துக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கத்தில் முடிந்ததை அடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதியில் இருந்து பெற்றோலிய நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. TotalEnergies நிறுவனத்துக்குச் சொந்தமான ஏழு சுத்திகரிப்பு ஆலைகள் முடங்கின. இந்நிலையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மூலம் ஐந்து ஆலைகளின் ஊழியர்களை மீள பணிக்கு அழைத்துள்ளனர்.
Feyzin மற்றும் Gonfreville சுத்திகரிப்பு ஆலைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டும் தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், Gonfreville சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் இன்று மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.