மூன்று நாட்களுக்கு முன்பாக பா-து-கலே பகுதியில் இருந்து பிரித்தானியா நோக்கி செல்லமுற்பட்ட 12 அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியிருந்தமை அறிந்ததே. இந்நிலையில், நேற்று புதன்கிழமை இரவு மீண்டும் அதேபோன்ற முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரவு 11 மணி அளவில் இச்சம்பவம் Marck (Pas-de-Calais) நகர கடற்பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. சிறிய படகு ஒன்றில் ஆண்கள் பெண்கள் என மொத்தம் 20 பயணித்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரே பாதுகாப்பு உடை அணிந்திருந்தனர்.
அவர்களை வழிமறித்த கடற்படையினர், கரைக்குச் செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அதனை செவிமடுக்காமல் தொடர்ந்து பயணிக்க முற்பட்டனர். அதை அடுத்து காவல்துறையினர் LBD எனப்படும் இறப்பர் குண்டுகளாலான துப்பாக்கியால் அகதிகளை நோக்கி சுட்டனர். பின்னர் அவர்களை கப்பலில் ஏற்றி கரைக்கு அழைத்துச் சென்றனர்.