France Périgny :மதுபோதையில் மகிழுந்தைச் செலுத்திய நபர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தி இருவர் பலியாக காரணமாக அமைந்துள்ளார்.
Périgny (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. 56 வயதுடைய ஒருவர் அவரது தந்தை மற்றும் தாயை ஏற்றிக்கொண்டு மகிழுந்தில் பயணித்த நிலையில், மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு வெளியேறி, விபத்துக்குள்ளானது.
வேறு வாகனங்களின் தலையீடு இல்லாமல், தாமாகவே விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இச்சம்பவத்தில் மகிழுந்தில் பயணிந்த (தாய் தந்தை) இருவர் பலியாகியுள்ளனர்.
சாரதி நிறைந்த மதுபோதையில் இருந்தமையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
85 மற்றும் 81 வயதுடைய இருவரே பலியாகியுள்ளனர். சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.