புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம் (PANNEAU) ஒன்று புதிதாக வீதிகளிலும்; நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சின்னம் 2020 ஆண்டு அரச வரத்தமானியில் (journal officiel) வெளியிடப்பட்டது.
ஆனாலும் தற்போது மட்டுமே இவை அமைக்கப்பட்டு வருவதுடன் பெருமளவில் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது.நெடுஞ்சாலைகளிலோ வீதிகிளிலோ ஒரு ஒழுங்கையின் (voies) மீது இந்தச் சின்னம் அமைக்கப்பட்டு இருந்தால் அந்த ஒழுங்கையானது covoiturage இற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
covoiturage என்பது தனியார் வாகனம் ஒன்று, ஒன்றிற்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தான் செல்லும் பாதையில் அழைத்துச் செல்வதாகும். இதற்கு அந்தச் சாரதி வெறும் பிரயாணச் செலவை மட்டும் அதாவது எரிபொருள் மட்டும் தேய்மானச் செலவை மட்டும் பயணிகளுடன் பங்கு பிரித்துக் கொள்ள முடியும். அது தவிர எந்தக் கட்டணமும் பெறக்கூடாது. அது வாடகை வாகனம் அல்ல. ஆனால் உங்கள் சிற்றுந்தை நீங்கள் covoiturage இற்குப் பதிவு செய்து தொடரச்சியான பங்களிப்புச் செய்தால் அரசாங்கம் உங்களிற்கு உதவித் தொகையும் வழங்கும்.

சுற்றப்புறச்சூழல் மற்றும் வளி மாசடைவு தவிர்க்கும் வகையில் இந்தச் சின்னம் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் மற்றும் போக்குவரத்து துணை அமைச்சினாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வீதிச் சின்னமானது இரண்டு வகைப்படும்.
ஒன்று இந்தச் சின்னத்தின் இலத்திரனியல் ஒளி மிளரப்படும் போது அல்லது குறிப்பட்ட நேரத்திற்கு மட்டும் அந்த ஒழுங்கை covoiturage இற்கு ஒதுக்கப்படும் என்ற வகைச் சின்னம்.

மற்றொன்று நிரந்தமாக அந்த ஒருங்கை covoiturage இற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதாகும்.
அவதானம்! இந்த வீதிக்கட்டுப்பாட்டை மீறினால் 135€ குற்றபபணம் வசூலிக்கப்படும்.
சிறிதுகாலததில் வாகனச்சாரதிப்பத்திரப் புள்ளிகளும் நீக்கப்படும் ஆபத்து உள்ளது.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்