நேற்று மே 24, செவ்வாய்க்கிழமை மாலை Gare du Nord தொடருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
மின்சார ஒழுக்கு காரணமாக இடம்பெற்ற இந்த தீ விபத்து உடனடியாகவே அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்றபோதும், ஒரு சில தொடருந்து சேவைகள் ‘தடையைச் சந்தித்தது’
4 ஆம் 5 ஆம் மெற்றோ சேவைகளும், K வழிச் சேவைகளும் தடையைச் சந்தித்தது. இதில் 4 ஆம் இலக்க மெற்றோ Barbès-Rochechouart மற்றும் Réaumur–Sébastopol நிலையங்களிடையே தடையை சந்தித்தது.
எவ்வாறாயினும் மிக விரைவாக தீ அணைக்கப்பட்டு, போக்குவரத்துக்கள் அனைத்தும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்