EuroMillions விளையாட்டில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்றும் அத்தொகை உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி Hauts-de-Seine மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டில் ஒரு மில்லியன் யூரோக்கள் தொகையை வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால் குறித்த நபர் அத்தொகையினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.
நேற்று ஏப்ரல் 29 ஆம் திகதி நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அத்தொகையினை எவரும் உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற பெரும் தொகையான பணத்தினை உரிமை கோராமல் விடுவது மிக அரிதான நிகழ்வு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்