யூரோ கோப்பை: மைதானத்தின் பாதியில் இருந்து கோல் அடித்த பேட்ரிக் சிக் – குவியும் பாராட்டு VIDEO

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடரில் செக் குடியரசு வீரர் பேட்ரிக் சிக் மைதானத்தில் பாதி தூரத்தில் இருந்து கோல் அடித்தார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல்கட்ட லீக் போட்டிகள் தொடர்ந்து விறு விறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டி பிரிவில் இடம்பெற்றுள்ள செக் குடியரசு அணியும் ஸ்காட்லாந்து அணியும் பலப்பரிட்சை நடத்தியது.

- Advertisement -

இதில் இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில்,ஆட்டத்தின் 42 வது நிமிடத்தில் செக் குடியரசு அணி வீரர் பேட்ரிக் சிக் ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கை துவங்கினார்.

- Advertisement -

இதையடுத்து வாங்கிய கோலை திருப்பும் நோக்கில் விளையாண்ட ஸ்காட்லாந்து அணி தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து அணி கோல்கீப்பர் மார்சல் பந்தை தனது அணி வீரரிடம் அடித்துவிட்டு கோல் பாக்ஸுக்கு வெளியே நின்றிருந்தார். அப்போது மைதானத்தில் பாதியில் பந்தை எடுத்த செக் குடியரசு வீரர் பேட்ரிக் சிக், ஸ்காட்லாந்து அணி கோல் கீர்ப்பர் கோல் கம்பத்தை விட்டு வெளியே இருப்பதைக் கண்டு பந்தை நேராக கோல் கம்பத்தை நோக்கி அடித்தார்.

- Advertisement -

இதை பார்த்த ஸ்காட்லாந்து கோல் கீப்பர் மார்சல் எப்படியாவது பந்தை தடுக்க வேண்டுமென ஓடிவந்தார் ஆனால், அவர் வருவதற்குள் பந்து கிளாசிக் கோலானது. இதையடுத்து செக் குடியரசு அணி 2:0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. செக் குடியரசு வீரர் பேட்ரிக் சிக் அடித்த கோல்தான் இந்த தொடரில் நீண்ட தூரத்தில் இருந்து அடிக்கப்பட்ட கோலாகும். இவருக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிராவின் புனே நகரின் புறநகர் பகுதியல் நேற்று மாலை பயங்கர விபத்து...

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரச்சிதா! கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு VIDEO

பிக்பாஸ் வீட்டில் நேற்று கதறியழுத ரச்சிதாவைக் குறித்து அவரது முன்னாள் கணவர்...

கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்று அந்த...

இலங்கை: யாழ்ப்பாணத்தில் 16 இலட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு – கைது (Photo)

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை...

அவுஸ்திரேலியா வாழ் 19 ஆயிரம் அகதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

அவுஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக 19 ஆயிரத்துக்கு அதிகமான அகதிகள் நிச்சயத்தன்மையற்ற...

இலங்கையில் வங்கிகளின் வட்டிவீத அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி விகித உயர்வைக் கட்டுப்படுத்தி சலுகைகளை வழங்க...

சிறுமியிடம் அத்துமீறிய ஆட்டோ டிரைவர்! அடுத்து நடந்த விபரீதம்- வெளியான CCTV காட்சிகள்

ஓடும் ஆட்டோவிலிருந்து வன்புணர்வில் இருந்து தப்பிப்பதற்காக சிறுமி ஒருவர் வெளியே குதித்த...

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கவுள்ள பால்மா விலை!

பால்மா ஏற்றிவந்த கப்பல் கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link