பிரான்சைப் பொருத்தவரை சுற்றுச்சூழலை பாதிப்பது இனி விதி மீறல் அல்ல, கடுமையான தண்டனைக்குரிய குற்றம்.
ஆம், இனி சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் நடந்துகொள்வோருக்கு 4.5 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் ஒன்றை கொண்டுவர பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதிப்பது இனி குற்றமாக கருதப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் Barbara Pompili மற்றும் நீதித்துறை அமைச்சர் Éric Dupond-Moretti ஆகியோர் நேற்று அறிவித்திருக்கிறார்கள்.
அதற்கு 4.5 மில்லியன் யூரோக்கள் அபராதமும், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
அதேபோல், சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் என்ற ஒரு குற்றமும் இனி கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த குற்றத்திற்கான தண்டனை ஓராண்டு சிறை மற்றும் 100,000 யூரோக்கள் அபராதம்.
அதாவது, ஒருவர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதற்கு முன்னமே, அவரால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என முடிவு செய்யப்பட்டாலே அவர் தண்டிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்